சேலத்தில் வல்லவன்.! திருப்பூரில் வல்லவனுக்கு வல்லவன்.!! இன்னொரு சதுரங்க வேட்டை !?

  0
  12
  கணவன் - மனைவி

  சேலத்தில் ஆர்.எம்.வி குரூப்ஸ் என்கிற் பெயரில் கம்பெனி ஆரம்பித்த மணிவண்ணன் ஒரு மேதை.அவர் ,அவரது மனைவி இந்துமதி,சகோதரர்கள் ராம்,லட்சுமணன் மற்றும் மாமனார்.இந்தச் சிறிய டீமை வைத்துக்கொண்டு கோடி கோடிகளாக அள்ளி விட்டார் மனிதர்.

  சேலத்தில் ஆர்.எம்.வி குரூப்ஸ் என்கிற் பெயரில் கம்பெனி ஆரம்பித்த மணிவண்ணன் ஒரு மேதை.அவர் ,அவரது மனைவி இந்துமதி,சகோதரர்கள் ராம்,லட்சுமணன் மற்றும் மாமனார்.இந்தச் சிறிய டீமை வைத்துக்கொண்டு கோடி கோடிகளாக அள்ளி விட்டார் மனிதர்.

  பெரிய வித்தை எல்லாம் எதுவுமில்லை,சதுரங்க வேட்டையில் வருவதைப்போல மற்றவர்களின் ஆசையைத் தூண்டிவிட்டார்.100 நாட்களுக்கு ஆர்.எம்.வி குருப்சில் பணத்தை டெபாசிட் செய்தால் இரண்டுமடங்காகத் திருப்பித் தரப்படும் என்றார்.நீண்ட நாள் டெபாசிட்களுக்கு 25 சதவிகிதம் வட்டி தருகிறேன் என்றார்.அவளவுதான்,பணத்தைக் கொண்டுவந்து கொட்ட ஆரம்பித்தார்கள்.அதையும் தனது விளம்பரத்திற்குப் பயன் படுத்திக் கொண்டார் மணிவண்ணன்.

  கணவந் மனைவி

  அப்படி வரும் பணத்தை மேஜை முழுவதும் அடுக்கிவைத்து அருகில் அமர்ந்து புகைப்படம் எடுத்து டெபாசிட்டர்களுக்கு அனுப்பினார். இப்படி எக்கசக்கமாய் சுருட்டி அவர் எஸ்கேப் ஆனபிறகு,ஏமாளிகள் கூட்டம் போலீசில் புகார் கொடுத்தது.இரண்டு மாதத்திற்கு முன்பு துபாய்க்கு எஸ்கேப்  ஆன இந்த ஜோடி இரண்டு நாளைக்கு முன்  ஊர் திரும்பிய நிலையில் மணிவண்ணனையும் அவர் மனைவியையும் போலீஸ் கைது செய்தது சிறையில் அடைத்தனர்.

  இதுவரை படித்ததெல்லாம் ஏற்கனவே நாம் பல முறை படித்த , பார்த்த கதைதான் இல்லையா , இனிமேல்தான் திடுக்கிடும் திருப்பம்.அந்த மணிகண்டனையும் அவர் மனைவி இந்துமதியையும் சேலம் குற்றப்பிரிவு போலீசார் காவலில் எடுத்து விசாரணையை துவங்கியபோதுதான் அந்த அதிர்ச்சி தகவலைச் சொன்னாராம் மணிவண்ணன்.

  அதன்படி திருப்பூர்காரர் ஒருவர்,தனது ஈரோட்டுக்கார கூட்டாளியுடன் வந்து தன்னிடம் போலி தங்கபிஸ்கட்டைக் காட்டி 100 கோடிரூபாய் ஏமாற்றி பெற்றுக்கொண்டு மாயமாகி விட்டதாக அவர் சொன்னதைக் கேட்டு அசந்து போன போலீசார் இப்போது அந்த திருப்பூர் தில்லாலங்கடியைத் தேடி வருகிறார்களாம்,இனி அவர் வந்து என்ன கதை சொல்லப் போகிறாரோ,பொறுத்து இருப்போம்.