சேரனுடன் தீபாவளி கொண்டாடிய பிக் பாஸ் தோழிகள்!

  0
  7
   பிக் பாஸ்

  பிக் பாஸ் வீட்டிலிருந்து வந்த ஷெரின் மற்றும் சாக்ஷி இருவரும் முதல் வேலையாக இயக்குநர் சேரன் வீட்டுக்கு விசிட் அடித்து அவரின் நலம் விசாரித்தனர். 

  நடிகைகளும் பிக் பாஸ் பிரபலங்களுமான ஷெரின், சாக்ஷி இருவரும்  இயக்குநர் சேரனுடன்  தீபாவளி பண்டிகையைக் கொண்டாடியுள்ளனர்.

  sakshi

  பிக் பாஸ் 3 நிகழ்ச்சி  105 நாட்களுடன்  சமீபத்தில் வெற்றிகரமாக முடிந்தது. இதில் முகின் ராவ் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தை சாண்டியும், மூன்றாவது இடத்தை லாஸ்லியாவும் பிடித்தனர்.

  cheran

  நிகழ்ச்சி முடிவடைந்தாலும்  சக போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து அன்பைப் பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.அந்த வகையில் பிக் பாஸ் வீட்டிலிருந்து வந்த ஷெரின் மற்றும் சாக்ஷி இருவரும் முதல் வேலையாக இயக்குநர் சேரன் வீட்டுக்கு விசிட் அடித்து அவரின் நலம் விசாரித்தனர். 

   

  இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஷெரின் மற்றும் சாக்ஷி இருவரும் சேரன்  குடும்பத்துடன் தீபாவளியைக் கொண்டாடியுள்ளனர். பிரபல தனியார் நட்சத்திர விடுதியில் ஒன்றுகூடி தீபாவளி திருநாளைக் கொண்டாடியுள்ள இந்த நிகழ்வில் ஷெரின் மட்டுமில்லாது அவரது  அம்மாவும் கலந்து கொண்டுள்ளார். இதற்கான புகைப்படங்களைச்  சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.