சேரனுக்கு ரகசிய அறை; கவினுக்கு பப்ளிக்காக ஒரு அறை: கலாய்க்கும் கமல்!

  0
  11
   கவின்

   பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சியின் முதல் புரொமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. 

  பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சியின் முதல் புரொமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. 

  விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி நெருங்கியுள்ளது.  பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் , ப்ரீஸ் டாஸ்க் நடைபெற்றது. அதில் ஹவுஸ்மேட்ஸ் குடும்பத்தினர் வந்து போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினர்.

  kamal

  இதனிடையே கடந்த வாரம் எலிமினேஷன் ப்ராசஸ் இல்லை. அதற்கு பதிலாகச் சேரன் சீக்ரெட் ரூமில் வைக்கப்பட்டு மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார். ஆனால்  இந்த வாரம் எலிமினேஷனில் கவின், சாண்டி, தர்ஷன், ஷெரின் மற்றும் வனிதா ஆகியோர் உள்ளனர். இதனால் யார் இந்த வாரம் வெளியேறுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. 

   

  இந்நிலையில் பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சியின் முதல் புரொமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.  அதில் கமல் ஹாசன், ‘பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்களுக்கு தங்களுக்கு வெளியில் உள்ள  புகழும், விமர்சனமும் உடனுக்குடன் அவர்களை போய்  சேராது. அதை அன்றாடம் அனுபவித்துக் கொண்டு இருப்பவர்கள் அவர்களது குடும்பத்தார்கள். நீங்க உங்க குடும்பத்தாரை  பார்த்து மகிழ்ந்துடீங்க. சேரனுக்கு ரகசிய அறை; கவினுக்கு பப்ளிக்காக ஒரு அறையும் கிடைச்சது. ரெண்டும் ரெண்டு விதமான அறைகள் என்று சொல்ல அதற்கு கவின், நல்லா புரிஞ்சது சார்’ என்று கூறி அசடு வழிகிறார். 

  கடந்த வாரம் நடந்த சுவாரஸ்யங்கள் பற்றி கமல் ஹவுஸ்மேட்ஸிடம் உரையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது