செல்லாது… செல்லாது… இத நாங்க ஏத்துக்க மாட்டோம்: கருத்து கணிப்பு குறித்து கடுப்பான எடப்பாடி!?

  0
  4
  எடப்பாடி பழனிசாமி

  தமிழகத்தைப் பொறுத்தவரை வெளிவந்தவை கருத்துக் கணிப்புகள் அல்ல , கருத்து திணிப்புகள் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

  சேலம்:  தமிழகத்தைப் பொறுத்தவரை வெளிவந்தவை கருத்துக் கணிப்புகள் அல்ல , கருத்து திணிப்புகள் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

  dmk

  மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்று நேற்றுடன் நடந்து முடிந்துள்ளது.  தேர்தல் முடிவுகள் வரும் 23 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது. முன்னதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. தமிழகத்தில் திமுக கூட்டணியே அதிக இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகப் பெருவாரியான கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

  cm

  இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முதல்வர் பழனிசாமி, ‘அதிமுக குறைந்த இடங்களை இந்த தேர்தலில் பெறும்  என்பது தேர்தல் கருத்துக் கணிப்பு அல்ல. தேர்தல் கருத்து திணிப்பு. இது போன்ற கருத்துக் கணிப்பு முடிவுகளைக் கடந்த 2016 ஆம் ஆண்டே நாங்கள் பொய்யாக்கினோம். அதே போல் இம்முறையும் தேர்தல்  கருத்துக்  கணிப்பு முடிவுகளைப் பொய்யாக்குவோம். புதுவை உள்பட 39 நாடாளுமன்றத் தொகுதி மற்றும் இடைத்தேர்தல்களில் அதிமுக கூட்டணியே வெற்றிபெறும்’ என்று நம்பிக்கை தெரிவித்தார். 

  ops

  தொடர்ந்து பேசிய அவர், ‘தமிழகத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்னையை சமாளிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வறட்சி குறித்த ஆலோசனையும் நடத்தப்பட்டுள்ளது. விவசாயிகளைப் பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்தாது’ என்றார்.