செல்லப் பிராணிகளை சம்மரில் பாதுகாப்பது.எப்படி?

  0
  7
  நாய்,பூனை

  நாய்களுக்கும் பூனைகளுக்கும் வெய்யில் காலம்தான்  மிகவும் கடினமானது. அவற்றுக்கு உடல் முழுதும் முடியிருப்பதால் நம்மை விட அவற்றுக்கு துண்பம் அதிகம்.ஆனால்,ஒரு நாய்குட்டியின் நெஞ்சில் நீங்கள் இடம்பிடிக்க ஏற்ற காலம் கோடைதான்.இந்த நேரத்தில்தான் அவற்றுக்கு தோலிலிலும்,காதுகளிலும் தொற்றுக்கல் ஏற்படும் .ஆகவே கவனமாக பார்த்துக் கொள்வது எப்படி என்பதை அறிய இதைப் படியுங்கள்.

  நாய்களுக்கும் பூனைகளுக்கும் வெய்யில் காலம்தான்  மிகவும் கடினமானது. அவற்றுக்கு உடல் முழுதும் முடியிருப்பதால் நம்மை விட அவற்றுக்கு துண்பம் அதிகம்.ஆனால்,ஒரு நாய்குட்டியின் நெஞ்சில் நீங்கள் இடம்பிடிக்க ஏற்ற காலம் கோடைதான்.இந்த நேரத்தில்தான் அவற்றுக்கு தோலிலிலும்,காதுகளிலும் தொற்றுக்கல் ஏற்படும் .ஆகவே கவனமாக பார்த்துக் கொள்வது எப்படி என்பதை அறிய இதைப் படியுங்கள்.

  dog and cat

  கோடையில் அவைகளுக்கு அதிகம் நீர் தேவைப்படும். அவற்றின்  ஈறுகள் உலர்ந்து இருக்கும்.ஆகவே வீட்டுக்குள் அதற்கு வசதியான இடத்தில் எப்போதும் சுத்தமான தண்ணீர் உள்ள பாத்திரத்தை வைத்திருங்கள்.முடிந்த வரை வெய்யில் காலத்தில்  டிரையான உணவுகளைத் தவிருங்கள்.நாய்களுக்கும் பூனைகளுக்கு அவை படுக்க,உலவ நிழலான இடவசதி செய்து கொடுங்கள். 

  வெய்யில் காலத்தில் அதன் மூக்கு சூடாக இருந்தாலோ,ஈறுகள் சிவந்து காணப்பட்டாலோ ,வாந்தி வயிற்றுப் போக்கு இருந்தாலோ அதனால் வெய்யிலை தாங்க முடியவில்லை என்று பொருள். அது போன்ற சமையங்களில் நிழலில் படுக்கவைத்து ஈர டவலால் போர்த்தி விடுங்கள்.தண்ணீர் தொட்டியில் போடக்கூடாது.

  dog

  பெரும்பாலான நாய்களுக்கு கார் சவாரி பிடிக்கும்.ஆனால், வெளியில் போகும்போது அவைகளை காரில் விட்டுவிட்டு போகக்கூடாது.மூடப்பட்ட காருக்குள் 10 நிமிடத்தில் காரின் வெப்பநிலை 100 டிகிரியை தாண்டிவிடும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

  மனிதர்களைப்  போலவே நாய்களுக்கும் கோடைகாலத்தில் சன்ஸ்க்ரீன் தேவைப்படும் .வெளியில் நீண்ட நேரம் வைத்திருக்கப் போகிறீர்கள் என்றால் சன்ஸ்க்ரீன் தேவை,இலாவிட்டால் புண்வரும்.முக்கியமாக முடி அடர்த்தி குறைவான வயிறு ,காது , மூக்கு போன்ற இடங்களில் சன்ஸ்க்ரீன் லோஷன் தடவ வேண்டும்.நீங்கள் பயன்படுத்தும் கிரீம் வேண்டாம்.உங்கள் வெட்னரி டாக்டரை கேளுங்கள்.

  dog

  நாய்களின் உடலில் இருக்கும் முடியை கொஞ்சம் டிரிம் செய்யலாம்.குறைந்தது ஒரு இஞ்ச் முடியாவது இருக்க வேண்டும்.ஒட்ட வெட்டுவதோ ஷேவ் செயவதோ ஆபத்து.வெய்யில்,குளிர் இரண்டு பருவத்திலும் அவற்றுக்கு முடி அவசியம்.

  நாய்களை வெளியே வாக்கிங் அழைத்துப் போவது அவசியம். ஆனால்,  அதிகாலை அல்லது சூரியன் மறைந்த பிறகு அழைத்துப் போகவேண்டும். தவிர்க்க முடியாமல் வெய்யில் நேரத்தில் வெளியே அழைத்துப் போனால்,அவற்றை முடிந்தவரை நிழலான இடத்தில் மண் தரையில் நிற்க வையுங்கள்.அவற்றுக்கு உடல் வெப்பம் கீழிருந்து மேலே பரவும் என்பதால்,சிமெண்ட் ,கல் ஆவிய இடங்களில் நிற்கவிட வேண்டாம்
  வெய்யில் காலத்தில்தான் அவற்றுக்கு பூச்சிகள்,உண்ணிகள் மூலம் நோய்கள் வரும்.அதனால் கவனமாக இருங்கள்

  dog

  நாய்களுக்கும் வெய்யில் காலத்தில் தண்ணீரில் மிதக்க பிடிக்கும்,ஆழம் குறைந்த ஒரு டப்,அல்லது தண்ணீர் தொட்டியை உங்கள் செல்லத்துக்கு வாங்கிக் கொடுங்கள்.ஆழமான கிணறு குளம் போன்றவறில் அவைகள் இறங்கும்போது கவனம் தேவை.சில வகை நாய்கள் சரியாக நீந்தாது.ஒரு நற்செய்தி, நாய்களுக்கும் லைஃப் ஜாக்கெட் வந்துவிட்டது.

  பட்டாசுகள் வெடிக்கப்படும் போது நாய்கள் பயப்படும்.அந்த நேரத்தில் அருகில் இருந்து தைரியம் சொல்லுங்கள். பட்டாசுகள் வெடிக்கும்போது சிதறும் காகிதங்களை முகர்ந்து பார்க்க அனுமதிக்காதீர்கள்.