செல்போன் பேசிய படி இருந்த தாய்… 2வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தைக்கு நேர்ந்த கதி!

  0
  1
  குழந்தை

  நாராயணப்பதோட்டம், 7வது தெருவை சேர்ந்தவர் சையத் அபுதாகீ. இவருக்கு மும்தாஜ் என்ற மனைவியும் இரண்டு மகன்களும்  உள்ளனர்.

  குழந்தைகளை வாகனம் வரும் பகுதி, மாடி போன்ற இடங்களில் அழைத்து செல்லும் போது  பெற்றோர் வழக்கத்தை விட கவனமாக இருக்க வேண்டும். அந்த வகையில்  சென்னை பழைய வண்ணாரப்பேட்டை நாராயணப்பதோட்டம், 7வது தெருவை சேர்ந்தவர் சையத் அபுதாகீ. இவருக்கு மும்தாஜ் என்ற மனைவியும் இரண்டு மகன்களும்  உள்ளனர்.

  ttn

  இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் வீட்டின் மாடியில் மும்தாஜ்  போன் பேசிய படியே  2 வயது மகன் இர்பானுக்கு சோறு ஊட்டிக்கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக இர்பான் மாடியிலிருந்து தவறி விழுந்தான்.  இதனால் அதிர்ச்சியடைந்த மும்தாஜ்  கத்தி கூச்சலிட அங்கு வந்த அக்கம்  பக்கத்தினர், குழந்தையை மீட்டு  உடனடியாக  ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால்  குழந்தை இர்பான் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு உயிரிழந்தான். 

  ttn

  இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.