செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகர்… தட்டிவிட்டு சென்ற சல்மான் கான்!

  0
  3
  Salman Khan

  நடிகர் சல்மான் கான் இன்று கோவாவுக்கு விமானம் மூலம் வந்தார். விமானநிலையத்திலிருந்து வெளியே செல்லும்போது, ரசிகர் ஒருவர் அவருடன் செல்ஃபி எடுக்க முயன்றார். அப்போது, கோபமான நடிகர் சல்மான் கான், செல்போனை தட்டிவிட்டு செல்கிறார். அவருடன் வந்த பாடிகார்டுகளும் ரசிகர்களை மிரட்டும் வகையில் ஏதோ சொல்லிச் சென்றனர்.

  கோவா விமானநிலையத்தில் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை நடிகர் சல்மான் கான் தட்டிவிட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  snatches-mobile-01

  நடிகர் சல்மான் கான் இன்று கோவாவுக்கு விமானம் மூலம் வந்தார். விமானநிலையத்திலிருந்து வெளியே செல்லும்போது, ரசிகர் ஒருவர் அவருடன் செல்ஃபி எடுக்க முயன்றார். அப்போது, கோபமான நடிகர் சல்மான் கான், செல்போனை தட்டிவிட்டு செல்கிறார். அவருடன் வந்த பாடிகார்டுகளும் ரசிகர்களை மிரட்டும் வகையில் ஏதோ சொல்லிச் சென்றனர்.

  snatches-mobile

  ரசிகரின் செல்போனை சல்மான் கான் தட்டிவிட்டு செல்லும் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. சல்மான்கான் ரசிகரின் மொபைல் போனை தட்டிவிட்டு செல்வது இது முதல்முறை இல்லை. இதற்கு முன்பு யாஷ்ராஜ் ஸ்டூடியோவில் சல்மான்கான் சைக்கிள் ஓட்டி சென்றபோது, ரசிகர் ஒருவர் அதை வீடியோ எடுக்க முயன்றார். அப்போதும் செல்போனை சல்மான் கான் தட்டிவிட்டு சென்றார். இது தொடர்பாக போலீசில் புகார் கூட அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.