செலவுகள் எகிறிய போதிலும், லாபத்தை குவித்த தாபர் இந்தியா……..

  0
  5
  தாபர் இந்தியா

  தாபர் இந்தியா நிறுவனம் கடந்த டிசம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.398.87 கோடியாக உயர்ந்துள்ளது.

  நுகர்வோர் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் உள்நாட்டு நிறுவனமான தாபர் இந்தியா, இந்த நிதியாண்டின் 3வது காலாண்டில் (2019 அக்டோபர்-டிசம்பர்) ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.398.87 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற நிதியாண்டின் இதே காலாண்டைக் (2018 அக்டோபர்-டிசம்பர்) காட்டிலும் 8.62 சதவீதம் அதிகமாகும். 2018 டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.367.21 கோடி ஈட்டியிருந்தது.

  தாபர் இந்தியா

  2019 டிசம்பர் காலாண்டில் தாபர் இந்தியா நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் 6.99 சதவீதம் ஏற்றம் கண்டு ரூ.2,352.97 கோடியாக உயர்ந்துள்ளது. 2018 டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் ரூ.2,199.21 கோடியாக இருந்தது.

  தாபர் இந்தியா தயாரிப்புகள்

  தாபர் இந்தியா நிறுவனம் 2019 டிசம்பர் காலாண்டில் மொத்தம் ரூ.1,924.94 கோடிக்கு செலவுகளை மேற்கொண்டுள்ளது. இது 2018 டிசம்பர் காலாண்டுடன் ஒப்பிடும்போது  6.03 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் தாபர் இந்தியா நிறுவனத்தின் மொத்த செலவினம் ரூ.1,815.41 கோடியாக இருந்தது.