செயலிழந்தது ஐஆர்சிடிசி இணையதளம்! பயனர்கள் அவதி

  0
  2
  IRCTC

  ஐஆர்சிடிசி இணையதளம் செயலிழந்த காரணத்தால், பயணச் சீட்டுகளைப் பதிவு செய்ய முடியாமல் பல்வேறு இன்னல்களை சந்திக்கும் பரிதாப நிலைக்கு லட்சக்கணக்கான மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

  ஐஆர்சிடிசி இணையதளம் செயலிழந்த காரணத்தால், பயணச் சீட்டுகளைப் பதிவு செய்ய முடியாமல் பல்வேறு இன்னல்களை சந்திக்கும் பரிதாப நிலைக்கு லட்சக்கணக்கான மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

  இந்திய ரயில்வே துறையின் ஐஆர்சிடிசி வலைத்தளமானது ரயில் பயணிகளுக்கு உணவு வழங்கல், சுற்றுலா மேலாண்மை மற்றும் இணையவழி பயணச்சீட்டுப் பதிவு ஆகிய சேவைகளை மேற்கொண்டு வருகிறது. இச்சேவையை நாள்தோறும் லட்சக்கணக்கான ரயில் பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று மாலை முதல் ஐஆர்சிடிசி இணையதளம் செயல்படாததாக கூறப்படுகிறது.

  IRCTC

  பராமரிப்புக்காரணமாக வலைதள செயல்பாட்டில் கோளாறு ஏற்பட்டுள்ளது என ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது. வலைத்தள செயல்பாட்டில் ஏற்பட்ட இந்த கோளாறை ரயில்வே பொதுத்துறை நிறுவனமான ரயில்வே தகவல் அமைப்புகள் மையம் சரி செய்யாத காரணத்தால், லட்சகணக்கான பயணிகள் தங்களது பயணச் சீட்டுகளைப் பதிவு செய்யும் வாய்ப்பை இழந்துள்ளனர்.