செம டேஸ்ட்டான ‘ரவா முட்டை மசால் பண்டல்’..

  0
  3
  ரவா முட்டை மசால்

  மதிய உணவை எடுத்துக்கொண்டு அலுவலகம் போகிறவரா நீங்கள்?
  எப்பவும் அதே கலந்த சாதம்தானா? என்று உங்கள் குழந்தைகள் அடம் பிடிக்கின்றனரா? இதோ ஒரு எளிய ஆனால் சுவையான வழி!

  மதிய உணவை எடுத்துக்கொண்டு அலுவலகம் போகிறவரா நீங்கள்?
  எப்பவும் அதே கலந்த சாதம்தானா? என்று உங்கள் குழந்தைகள் அடம் பிடிக்கின்றனரா? இதோ ஒரு எளிய ஆனால் சுவையான வழி!

  egg rava

  தேவையான பொருட்கள்:

  200 கிராம் ரவை,
  100 மில்லி தயிர்
  மிளகுத்தூள்.
  உருளைக்கிழங்கு -2 (அவித்து மசித்துக் கொள்ளுங்கள்)
  முட்டை – 3
  சீரகம் ½ டீஸ்பூன் 
  மல்லித்தூள் 1 டீ ஸ்பூன்
  மிளகாய்த்தூள் 1டீ ஸ்பூன்
  மஞ்சள் தூள் ½. டீஸ்பூன்
  பெரிய வெங்காய 1
  உப்பு
  எண்ணெய் 
  கறிவேப்பிலை.

  எப்படிச் செய்வது:

  egg dosa

  முதலில் ரவையுடன் தயிர் சேர்த்து கலக்கவும்,மேலும் ஒரு 100 மில்லி வரை நீர் சேர்க்கலாம். கட்டியில்லாமல் கரைத்து வைத்துவிட்டு ஒரு சிறு சட்டியை அடுப்பில் வைத்து,அதில் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து ,அதில் பொடியாக வெட்டிய பெரிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்குங்கள்.அத்துடன் இஞ்சிப் பூண்டு பேஸ்ட் ,உப்புச் சேர்த்து வதக்குங்கள்.

  எண்ணெய் பிரிந்து வந்ததும் ,மல்லித்தூள் ,மஞ்சள் ,தூள் சேர்த்து வதக்குங்கள்.பொடிகளின் பச்சை வாசனை போனதும் மூன்று முட்டைகளையும் உடைத்து ஊற்றி கைவிடாமல்.கிளறி பொடிமாஸ் பதத்துக்கு வந்ததும்,அவித்து மசித்த உருளைக் கிழங்கையும் அதில் போட்டு நன்றாகக் கிளறிவிட்டு அடுப்பை அனைத்து. விடுங்கள்.

  egg dosai

  இப்போது தயிரும் தண்ணீரும் கலந்து ஊற வைத்திருக்கும் கலவை எடுத்து ஒரு பெரிய மிச்கி ஜாரில் ஊற்றி,அத்துடன் சிறிது மஞ்சள் தூளுடன் ,உப்பும்,மிளகுத்தூளும் சேர்த்து மிக்சியில் அரையுங்கள்.
  இப்போது தோசைமாவு பதத்துக்கு வந்திருக்கும் அந்த கலவையை,தோசைக் கல்லில் மெல்லிய தோசைகளாக ஊற்றி எடுங்கள்.
  ( அவசரக் குடுக்கைகள் அந்த தோசையை அப்படியே மேலும் கொஞ்ச நேரம் விட்டு ,மொறு மொறு தோசையாகவும் சாப்பிடலாம்)