செமத்தியான கத்தரிக்காய் குடல்கறி கூட்டு!

  0
  12
  கத்தரிக்காய் குடல்கறி கூட்டு

   

  ஆட்டுக்குடலை வைத்து விதவிதமான டிஷ்கள் செய்யப்படுகின்றன.வறுவல் முதல்,புளியும் வெல்லமும் சேர்த்து குழம்பு வரை நிறைய வெரைட்டிகள் இருக்கின்றன.பொதுவாக எல்லா ஊரிலும் கிடைக்கிற டிஷ் ‘போட்டி’.
  அதேபோல, ஆட்டுக்குடலுடன் கத்தறிக்காயும் , கடலைப் பருப்பும் சேர்த்து செய்யப்படும் ‘ குடல்கறி’ கூட்டும் சிறப்பானதே.செய்துபாருங்கள் எல்லோரும் போட்டி போட்டுகொண்டு சாப்பிடுவார்கள்.

  தேவையான பொருட்கள்.

  brinjal

  சுத்தம் செய்யப்பட்ட குடல் ½ கிலோ.
  கத்தரிக்காய் ¼ கிலோ
  கடலைப் பருப்பு 100 கிராம்
  பெரிய வெங்காயம் 2
  தக்காளி 2
  இஞ்சி,பூண்டு விழுது 2 ஸ்பூன்.
  சோம்பு 1 ஸ்பூன்
  கசகசா 1 ஸ்பூன்
  தேங்காய் ½ மூடி
  மிளகாய் தூள் 2ஸ்பூன்
  மல்லித்தூள் 3 ஸ்பூன்
  மஞ்சள் தூள் ½ ஸ்பூன்
  கறிவேப்பிலை
  உப்பு தேவைக்கேற்ப 
  கடலை எண்ணெய் 1 குழிக்கரண்டி

  எப்படிச் செய்வது

  mutton gravy

  நன்றாகச் சுத்தம் செய்யப்பட்ட குடலை,சிறிய துண்டுகளாக வெட்டி,மஞ்சள் தூள் எலுமிச்சை சாறு பிழிந்து நன்றாகப் பிசைந்து கழுவுங்கள்.ஒன்றுக்கு இரண்டு முறை கழுவிக்கொண்டால் இன்னும் சிறப்பு. அத்துடன் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து,குக்கரில் இட்டு 4 விசில் வைத்து இறக்கி வையுங்கள்.

  கடலைப்பருப்பை குழையாமல் வேகவைத்துக் கொள்ளுங்கள்.தேங்காய் மற்றும் கசகசாவை மிக்சியில் போட்டு மையாக அரைத்து எடுங்கள்.
  இப்போது, சட்டியை அடுப்பில் வைத்து அது காய்ந்ததும் எண்ணெய் விட்டு சோம்பும்,கறிவேப்பிலையும் சேர்த்து தாளியுங்கள்.அத்துடன் வெங்காயத்தை பொடியாக வெட்டிச் சேர்த்து வதக்குங்கள்.வெங்காயம் வெந்ததும் இஞ்சிப் பூண்டுப் பேஸ்ட்டும் உப்பும் சேர்த்து 2 நிமிடம் கழித்து,தக்காளியையும் கத்தரிக்காயையும் வெட்டிச் சேர்த்து மூடிவைத்து ஐந்து நிமிடம் வேக விடுங்கள்.

  mutton

  அதற்குப் பிறகு வேகவைத்திருக்கும்  குடலை எடுத்து சட்டியில் கொட்டிக் கிளறி கத்தரிக்காய் வேகும் வரை விட்டு,உப்புச் சரிபாருங்கள்.வேகவைத்து வைத்திருக்கும் கடலைப் பருப்பை சேர்த்து,கடைசியாக அரைத்து வைத்திருக்கும் தேங்காய் கசகசா கலவையை சேர்த்து ஒரு
  கொதிவிட்டு இறக்குங்கள்.

  இது சோற்றுக்கு மட்டுமல்லாமல் இட்லி தோசைகளுக்கும் நல்ல இணையாக இருக்கும்.அதோடு குழையப் பிசைந்த ரசம் சோற்றுக்குத் தொடுகறியாக வைத்தும் சுவைக்கலாம்.