சென்றுகொண்டிருந்த மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ!

  0
  15
  ரயில்

  சென்னையிலிருந்து மைசூருக்கு பிரத்தியேகமாக இயக்கப்பட்டு வரும் மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலின் உணவு தயாரிக்கப்படும் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. 

  சென்னையிலிருந்து மைசூருக்கு பிரத்தியேகமாக இயக்கப்பட்டு வரும் மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலின் உணவு தயாரிக்கப்படும் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. 

  ரயில்
  தீ ஏற்பட்டதை உணர்ந்த ரயில் ஓட்டுநர் ரயிலை ஜோலார்பேட்டைக்கும், சின்னகம்பட்டுக்கும் இடையே நிறுத்தியுள்ளார். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர்  விரைந்து தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். ஓடும் ரயிலில் ஏற்பட்டுள்ள தீ விபத்தால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இருப்பினும் உணவுப்பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டதால் உயிர்சேதம் ஏதுமின்றி தவிர்க்கப்பட்டது. விபத்துக்குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.