சென்னை 28 படம் தெரியும், உணவகம் தெரியுமா?

  0
  8
  chennai-28-ground-kadai

  சென்னை 28 எல்லைக்குட்பட்ட அதே மந்தைவெளி,அதே ராஜா அண்ணாமலை புரம் ,செய்ண்ட் மேரீஸ் சாலையில்தான் இந்த கடையிருக்கிறது.பெயரே சென்னை 28 கிரவுண்ட் கடைதான். சின்னஞ்சிறிய வண்டிக்கடைதான்,காலை மதியம் இரண்டு வேளையும் நல்ல கூட்டம் களைகட்டுகிறது.

  சென்னை 28 எல்லைக்குட்பட்ட அதே மந்தைவெளி,அதே ராஜா அண்ணாமலை புரம் ,செய்ண்ட் மேரீஸ் சாலையில்தான் இந்த கடையிருக்கிறது.பெயரே சென்னை 28 கிரவுண்ட் கடைதான். சின்னஞ்சிறிய வண்டிக்கடைதான்,காலை மதியம் இரண்டு வேளையும் நல்ல கூட்டம் களைகட்டுகிறது.

  காலையில்,இட்லி,தோசை முட்டைதோசை மட்டும்தான். ஆனால் தொட்டுக்கொள்ள சட்னி சாம்பாருடன் சிக்கன் குழம்பு கிடைக்கும்.
  மதியம் சாப்பாடு 50 ரூபாய்,ஒரு பொரியல் அப்பளம்,சிக்கன் குழம்பு, மீன்குழம்பு, சாம்பார், ரசம் அவளவுதான். ஆனால் சாப்பிட வரும் யாரும் அத்துடன் முடித்துக்கொள்வதில்லை.காரணம் இவர்கள் தரும் விதவிதமான தொடுகறிகள்.

  prawn

  போட்டி, தலைக்கறி, சிக்கன் ரோஸ்ட், சிக்கன் லிவர் ரோஸ்ட், எறால், கடமா, சுறாபுட்டு என எது கேட்டாலும் ஐம்பது ரூபாய். வஞ்சிரம் மீன் ஃபிரை உண்டு, அதுமட்டும் 100 ரூபாய்.பெரும்பாலான வாடிக்கையாளர்கள் பொரியல் அப்பளத்தை எல்லாம் கண்டு கொள்வதே இல்லை. இலைபோட்ட தட்டில் சோற்றை வைத்து நீட்டியதும் தலைகறியோ, இறால் குழம்போ வாங்கிக் கொண்டு அதை முடித்ததும், மேலும் கொஞ்சம் சோற்றுடன் புளிப்புத் தூக்கலான ரசத்தை வாங்கிக் கொள்கிறார்கள்.

  அதன் பிறகு முதல் ரவுண்டில் தவற விட்ட அப்பளத்தின் துணையோடு அந்த ரசத்தை சந்தித்து அன்றைய மதிய உணவை நிறைவு செய்கிறார்கள். சிக்கன் ஃபிரையும், சுறா புட்டும் தவிர மற்ற எல்லா தொடுகறிகளும் செமி கிரேவியாகவே தரப்படுவதால், வேறு குழம்புகளைத் தேடுவதில்லை மக்கள். இது எதுவுமே வேண்டாம் என்றால் ஆம்லெட் பனியாரம் தருகிறார்கள். 

  omelette

  வழக்காமாக ஆம்லெட்டுக்கு போடுகிற,முட்டை,வெங்காயம் பச்சை மிளகாய் தான்,ஆனால் அதைத் தோசைக் கல்லில் ஊற்றாமல்,பனியாரக் கல்லில் ஊற்றி எடுத்து பரிமாறுகிறார்கள்.அதைப் பக்கவாத்தியமாக வைத்துக்கொண்டு சாம்பார் ரசம் என்று சாத்வீகமாக உங்கள் மதிய உணவை முடித்துக்கொள்ளலாம். 

  சுத்தமான முறையிலேயே கடையை நடத்துகிறார்கள்.பார்சல் உண்டு, இறால் மற்றும் கடம்பாவுக்கு மட்டும் பார்சல் என்றால் 60 ரூபாய் வாங்குகிறார்கள். மற்றவை அதே 50 ரூபாய் விலையிலேயே கிடைக்கின்றன. காரைச் சற்றுத் தொலைவில் நிறுத்திவிட்டு வந்து தொடுகறிகளை மட்டும் பார்சல் வாங்கிக் கொண்டு போவது இங்கு அன்றாடம் நடக்கும் சாதாரனக்காட்சி!.