சென்னை வந்த சீன அதிபரின் கார்! ராக்கெட் லாஞ்சருக்கும் அசராத அதிநவீன வசதி! அம்புட்டும் துட்டு!

  0
  1
  சீன அதிபரின் கார்

  இம்மாதம் 11, 12 ஆகிய தேதிகளில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் சீன அதிபருடன் பிரதமர் மோடி மரியாதை நிமித்தமாக பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார். இதற்கான பிரம்மாண்டமான ஏற்பாடுகள் ஒருபக்கம் தமிழக அரசு செய்து வரும் நிலையில், சீனாவில் இருந்து அதிபர் பயன்படுத்துவதற்காக பிரத்யேகமான கார் இந்தியாவிற்கு வந்துள்ளது. மோடியுடனான இந்த சந்திப்பின் போது கலாச்சாரம், இருநாடுகளுக்கிடையேயான உறவுகள், பொருளாதாரம், வணிகம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து அவர்கள் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சீன அதிபரின் கார் குறித்து வெளியாகும் தகவல்கள் தான் இந்திய அதிகாரிகளை மிரள வைத்துள்ளது.

  china

  அத்தனை வசதிகளையும் கொண்டுள்ள இந்த காரின் விலை இந்திய மதிப்பில் 6 கோடி ரூபாய். தங்க இருக்கும் சோழா ஓட்டலில் இருந்து மகாபலிபுரத்துக்கு 49 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய இருக்கும் சீன அதிபர், வழிநெடுகிலும் வரவேற்பை பார்த்தப்படியே மெதுவாக காரில் செல்கிறார். இதற்காக அவரது கார் நேற்று சீனாவில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தது. சீனா அதிபருக்காகவே, சீனாவின் ஃப்ஹா நிறுவனம் தயாரித்துள்ள இந்த கார் அவருக்கு மட்டும் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டது. இந்த காரில் தான் சீனாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார். எந்த ரக துப்பாக்கி குண்டுகளாலும் துளைக்கவே முடியாத கண்ணாடிகள் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளன. இதைத் தவிர, ராக்கெட் லாஞ்சர் கொண்டு இந்த காரைத் தாக்கினாலும் இந்த கார் கொஞ்சம் கூட அசராது அப்படியே எந்திரன் ‘சிட்டி’ ரஜினி மாதிரி அதே இடத்தில் நிற்கும். ஆறு தானியங்கி கியர் வசதிகளைக் கொண்ட இதில் 110 லிட்டர் வரை பெட்ரோல் நிரப்ப முடியும். மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகம் செல்லக்கூடிய இந்த கார் 3,150 கிலோ எடை கொண்டது. இவற்றுடன் பாதுகாப்பு காரனங்கள் கருதி, வெளியே அறிவிக்கப்படாத பல கூடுதல் வசதிகளும் இந்த காரில் அமைக்கப்பட்டுள்ளன.