சென்னை மாநகராட்சியில் கணக்குக்காக கொரோனா கணக்கெடுப்பு! 

  0
  1
  corona in tamilnadu

  சென்னை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள பல வீடுகளுக்கு மாநகராட்சி சுகாதாரத் துறை ஊழியர்கள் வருகின்றனர். அவர்கள் வந்து வீட்டில் யார் எல்லாம் உள்ளார்கள், 60 வயதைக் கடந்தவர்கள் எத்தனை பேர் உள்ளனர், அவர்களுக்கு உடல் நலக் குறைபாடு உள்ளதா, சளி, இருமல் உள்ளிட்ட கொரோனா அறிகுறி உள்ளதா என்று விவரம் கேட்கின்றனர்.

  சென்னை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள பல வீடுகளுக்கு மாநகராட்சி சுகாதாரத் துறை ஊழியர்கள் வருகின்றனர். அவர்கள் வந்து வீட்டில் யார் எல்லாம் உள்ளார்கள், 60 வயதைக் கடந்தவர்கள் எத்தனை பேர் உள்ளனர், அவர்களுக்கு உடல் நலக் குறைபாடு உள்ளதா, சளி, இருமல் உள்ளிட்ட கொரோனா அறிகுறி உள்ளதா என்று விவரம் கேட்கின்றனர். மக்கள் கூறுவதை குறித்துக்கொண்டு செல்கின்றனர்.
  டெல்லிக்கு சென்று வந்தவர்கள் என்று மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், பலரும் உண்மையை சொல்லத் தயங்குகின்றனர். கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ள நேரத்தில் அரசு எடுக்கும் கணக்கெடுப்பின் லட்சணம் இந்த வகையில்தான் உள்ளது.

  social-distancing

  சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் உள்ளவர்களை கண்டறியும் ஆய்வுகள் தொடங்கியுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. நோயாளி உள்ள பகுதியில் ஐந்து கி.மீ சுற்றளவுக்கு ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. இது எந்த அளவுக்கு பலன் அளிக்கும் என்பது தெரியவில்லை. தென் கொரியா உள்ளிட்ட நாடுகள் அதிக அளவில் பரிசோதனைகளை மேற்கொண்டு கொரோனா பரவுவதைத் தடுத்து நிறுத்தியது. இங்கே இப்போதுதான் வீடு வீடாக சென்று சர்வே எடுக்கின்றனர். இப்படி எடுக்கப்பட்ட சர்வே தகவல் எந்த அளவுக்கு நம்பகத்தன்மை கொண்டதாக இருக்கும் என்று தெரியவில்லை.

  corona-checking-89

  உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை படி சந்தேகத்துக்குரிய நபர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கு பரிசோதனைகள் செய்வதன் மூலம் மட்டுமே கொரோனா பரவுதல் தடுத்து நிறுத்த முடியும். சர்வே நடத்துவது பலன் அளிக்காது. ஊரடங்கு தளர்த்தப்பட்டால் கொரோனா பரவுதல் வேகம் அதிகமாக இருக்கும் என்று மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் எச்சரக்கைவிடுத்துள்ளனர்.