சென்னை புறநகர் ரயில்களில் தானியங்கி கதவுகள் உள்ளிட்ட புதிய திட்டம்…!

  0
  1
  Train

  சென்னையில் தாம்பரம், சென்னை கடற்கரை, வேளச்சேரி, செங்கல்பட்டு உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் தினந்தோறும் வேலைக்குச் செல்லும் மக்களின் கூட்டம் அலைமோதுகிறது.

  சென்னையில் தாம்பரம், சென்னை கடற்கரை, வேளச்சேரி, செங்கல்பட்டு உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் தினந்தோறும் வேலைக்குச் செல்லும் மக்களின் கூட்டம் அலைமோதுகிறது. அதிக ரயில் சேவைகள் அந்த பகுதிகளில் இயக்கப்பட்டாலும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பயணிகள் ரயிலில் ஏற, இறங்க முடியாத அளவிற்குக் கூட்ட நெரிசல் ஏற்பட்டு சில பயணிகள் ரயிலில் தொங்கிய படி பயணம் மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டு வருகிறது. சில பயணிகள் ரயிலில் தொங்கி செல்லும் போது தவறி விழுந்து உயிரிழக்கும் அபாயமும் நிகழ்ந்து வருகிறது. 

  Train

  ரயிலில் உயிரிழந்த பல பேரின் வழக்குகள் சென்னை உயர்நீதி மன்றத்தில் பதிவாகியுள்ளன. அதில் ஒரு வழக்கில் தெற்கு ரயில்வே சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.டி. ராம் குமார், சென்னை புற நகர் ரயில்களில் குளிர்சாதனப் பெட்டி, தானியங்கி கதவுகள் உள்ளிட்ட புதிய சேவைகளை அறிமுகப்படுத்தும் திட்டம் உள்ளது என்று நீதிபதியிடம் தெரிவித்துள்ளார்.