சென்னை டாக்டருக்கு கொரோனா… பரவியது எப்படி?

  0
  3
  ReP image

  சென்னை டாக்டருக்கு கொரோனா பரவிய விதம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
  சென்னை அசோக் நகர் போலீஸ் லிமிட்டில் வரும் மேற்கு மாம்பலம் பொது சுகாதார மையத்தில் பணிபுரிந்து வரும் டாக்டர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

  சென்னை டாக்டருக்கு கொரோனா பரவிய விதம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
  சென்னை அசோக் நகர் போலீஸ் லிமிட்டில் வரும் மேற்கு மாம்பலம் பொது சுகாதார மையத்தில் பணிபுரிந்து வரும் டாக்டர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் அவர் வெளிநாட்டுக்கு சென்று வந்திருக்கிறார். அப்போது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அவருக்கு கொரோனா அறிகுறி தென்படவே உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

  corona-virus-patients

  இதைத் தொடர்ந்து அவர் பணியாற்றி வந்த மருத்துவமனைக்கு அவரிடம் சிகிச்சைக்கு வந்தவர்களை தேடும் பணியில் சுகாதாரத் துறை, காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அவருடன் பணியாற்றிய மற்ற மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 
  இவர் மூலமாக வேறு யாருக்கு எல்லாம் கொரோனா வைரஸ் பரவியது என்று தீவிரமாக ஆராய்ச்சி செய்து வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். 571 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. டெல்லியில் நடந்த இஸ்லாமிய மத மாநாட்டில் பங்கேற்றவர்கள் மூலமாக தமிழகத்தில் கொரோனா பரவியது என்று பலரும் கூறி வரும் நிலையில் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.