சென்னை கொள்ளையர்களுக்காக பிரத்யேகமாக செயல்படும் மாவுகட்டு பிரான்ச்!

  25
  Chain snatchers

  என்னன்னே தெரியல சார், இப்புடித்தான் போன வாரம் செயின் கொள்ளையர்கள் 10 பேரை அரெஸ்ட் பண்ணினோம், பத்து பேரும் குளிக்கப் போன இடத்துல கீழே விழுந்து ஒரே நேரத்துல 10 பேர் கையும் உடைஞ்சு மாவுகட்டு போடவேண்டியதா ஆகிடுச்சுன்னா பாருங்களேன்

  அனுமதியின்றி செயல்படும் மசாஜ் சென்டர்களாக தேடித்தேடிப்போய் கொள்ளையடித்து, பணியில் இருக்கும் ஊழியர்களை பாலியல் வன்முறை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தது மங்களேரி குமரன் தலைமையிலான கும்பல் ஒன்று. இவர்களின் கண்ணில் பட்ட லேட்டஸ்ட் டார்கெட் நீலாங்கரை அருகே காமராஜ் தெருவில் செயல்பட்டு வந்த மசாஜ் சென்டர். கூட்டாளிகள் 5 பேர்சகிதம், குமரன் மசாஜ் சென்டர் உள்ளேப் புகுந்து, ஊழியர்களை மிரட்டி பாலியல் அத்துமீறல் செய்து அவர்களிடமிருந்து 40,000 ரூபாய் ரொக்கம், தங்க சங்கிலியை மிரட்டி பிடுங்கிக்கொண்டனர். சம்பவ இடத்திற்கு எதேச்சையாக வந்த மசாஜ் சென்டர் உரிமையாளர், வெளிப்பக்கமாக கதவை சாத்திவிட்டு காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.

  Kumaran and Team

  விரைந்துவந்த காவல்துறையினர், மூவரை பிடிக்க, தலைவன் குமரன், பிரபாகரன், சதீஷ் ஆகியோர் மட்டும் தப்பிச் சென்றுவிட்டனர். தப்பிச்சென்ற மூவரும் அடுத்த போலீசார்வசம் சிக்கிவிட்டனர். என்ன, ஒரு சின்ன இக்கட்டு அவர்களுக்கு. போலீசாருக்கு பயந்து தப்பி ஓடும்போது உயரமான கட்டிடத்தில் இருந்து கீழே குதித்தபோது கை உடைந்துவிட்டதாக கூறி மாவுகட்டு போட்டிருந்தனர்.

  Chain snatchers

  உயரமான கட்டிடத்தில் இருந்து குதித்தால், காலில்தானே அடிபடும்? மூன்று பேரும் ஒரே நேரத்தில் குதித்தார்களா? ஒரே நேரத்தில் மூன்று பேரும் கையில் லேண்ட் ஆனார்களா? ஒருத்தருக்குக்கூட காலில் அடிபடவில்லையே ஏன்? என ஏகபப்ட்ட கேள்விகளை போலீசார் முன்வைத்தால், அவர்கள் சீரியசாக தரும் பதில் இதுதான். “என்னன்னே தெரியல சார், இப்புடித்தான் போன வாரம் செயின் கொள்ளையர்கள் 10 பேரை அரெஸ்ட் பண்ணினோம், பத்து பேரும் குளிக்கப் போன இடத்துல கீழே விழுந்து ஒரே நேரத்துல 10 பேர் கையும் உடைஞ்சு மாவுகட்டு போடவேண்டியதா ஆகிடுச்சுன்னா பாருங்களேன்”