சென்னை கொத்தவால்சாவடியில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

  0
  6
  chennai

  கொத்தவால்சாவடியில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அங்குள்ள டேவிட்சன் தெரு முடக்கப்பட்டது.

  சென்னை: கொத்தவால்சாவடியில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அங்குள்ள டேவிட்சன் தெரு முடக்கப்பட்டது.

  கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 400-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தாக்கம் வேகமாக அதிகரித்து வருவதால் மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று தமிழக அரசு எச்சரித்து வருகிறது. ஆனால் ஊரடங்கு தடை உத்தரவை மீறி சில பேர் அலட்சியமாக செயல்படுகின்றனர். அதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

  இந்நிலையில், சென்னை கொத்தவால்சாவடியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் அங்குள்ள டேவிட்சன் தெருவின் முனைகளை போலீசார் தடுப்பு கொண்டு மூடியுள்ளனர். அப்பகுதியில் வசிக்கும் மக்களை தீவிரமாக கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோல தமிழகத்தில் எங்கெல்லாம் யாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டாலும் சம்மந்தப்பட்ட நபர் வசிக்கும் தெரு மற்றும் பக்கத்து தெருக்கள் முடக்கப்படுகின்றன.