சென்னையை சேர்ந்த 50 வயது முதியவர் கொரோனாவால் பலி…உயிர்பலி 5 ஆக அதிகரிப்பு!

  0
  1
  கொரோனா

  தமிழகத்தில் 485 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்றைய நிலவரப்படி 3 பேர் பலியாகினர். 

  இந்தியாவில்  கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் வரும்  ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 144  தடை உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.  இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்தது. அதேபோல் தமிழகத்தில் 485 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்றைய நிலவரப்படி 3 பேர் பலியாகினர். 

  tt

  இதனிடையே துபாயிலிருந்து தமிழகம் வந்த 75 வயது முதியவர், கடந்த 3-ஆம் தேதி ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் ஒரு மணிநேரத்திலேயே உயிரிழந்தார்.  உயிரிழந்த 75 வயது முதியவரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு நடத்தப்பட்ட சோதனையில் அவர்  கொரோனா தொற்றால் பலியானது உறுதியாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பலியான எண்ணிக்கை 4 ஆக இன்று காலை உயர்ந்தது. 

  ttn

  இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவுக்கு மீண்டும்  ஓர் உயிர்பலி நிகழ்ந்துள்ளது. சென்னையை சேர்ந்த 50 வயது முதியவர் கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக கூறி சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதன் மூலம் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.