சென்னையில் வெளுத்து வாங்கிய மழை!

  0
  3
  மழை

  தமிழகத்தில் வடகிழக்கு  பருவமழை ஒருநாள் முன்பாகவே தொடங்கியுள்ளது. இதனால் சென்னையின் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு  முதலே  கனமழை பெய்தது.  

  சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு  பருவமழை தொடங்கி உள்ள நிலையில், சென்னை உள்பட  பல்வேறு மாவட்டங்களில்  பரவலாக மழை பெய்து வருகிறது. 

  தமிழகத்தில் வடகிழக்கு  பருவமழை ஒருநாள் முன்பாகவே தொடங்கியுள்ளது. இதனால் சென்னையின் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு  முதலே  கனமழை பெய்தது.  தாம்பரம், வண்டலூர் உள்பட பல்வேறு இடங்களில் சுமார் 30 நிமிடங்கள் மழை செய்தது. இதனால் சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. 

  rain

  இதேபோன்று தூத்துக்குடி, திருவாரூர், நாகை , தஞ்சை ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. 
  திருப்பூர், நெல்லை மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. 

  சென்னையை பொறுத்தவரை இன்று காலை முதல்  மழை வெளுத்து வாங்கியது. இதனால் பள்ளி மற்றும் அலுவலகங்களுக்கு செல்வோர் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.