சென்னையில் தீவிரமடையும் கொரோனா… தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு!

    0
    1
    கொரோனா வைரஸ்

    தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதுவரை கொரோனவால்  485 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இன்று ஒரேநாளில் 74  பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதில் 400க்கும் மேற்பட்டோர் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்கள்.

    தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதுவரை கொரோனவால்  485 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இன்று ஒரேநாளில் 74  பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதில் 400க்கும் மேற்பட்டோர் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்கள்.

    corona virus

    இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் விவரத்தை மாவட்டரீதியாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதில் சென்னையிலேயே கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.  அதாவது சென்னையில் 88பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து  திண்டுக்கல்லில் 43 பேருக்கும் திருநெல்வேலியில் 37 பேருக்கும், ஈரோட்டில்  32, கோவையில்  29, நாமக்கல் 24, தேனி மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் தலா  23, கரூரில் 22, செங்கல்பட்டு 19, திருச்சி மற்றும் மதுரையில் 17,  திருவாரூரில் 12, திருவள்ளூர் மற்றும் விருதுநகரில் தலா 11 நபர்களுக்கும், திருப்பத்தூர் மற்றும் விழுப்புரத்தில் 10 பேருக்கும், சேலம் மற்றும் தூத்துக்குடியில் தலா 9 பேருக்கும், திருவண்ணாமலையில் 6 பேருக்கும் நாகை, சிவகங்கை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தலா 5 பேருக்கும், வேலூர், காஞ்சிபுரம், கடலூர் திருப்பூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் தலா 4 பேருக்கும், ராமநாதபுரம் மற்றும் கள்ளகுறிச்சியில் தலா 2 பேருக்கும், தஞ்சாவூர் மற்றும் பெரம்பலூரில் தலா ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.