சென்னையில் காற்று மாசு குறைவு; ஒலி மாசு அதிகம்: தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்

  0
  1
  diwalicrackers

  தீபாவளி தினத்தன்று வெடிக்கப்படும் பட்டாசுகளின் காரணமாக ஏற்படும் ஒலி மாசு கடந்த ஆண்டை காட்டிலும் அதிகரித்தும், காற்றின் மாசு குறைந்தும் உள்ளது என தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது

  சென்னை: தீபாவளி தினத்தன்று வெடிக்கப்படும் பட்டாசுகளின் காரணமாக ஏற்படும் ஒலி மாசு கடந்த ஆண்டை காட்டிலும் அதிகரித்தும், காற்றின் மாசு குறைந்தும் உள்ளது என தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

  தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நடப்பாண்டு தீபாவளி பண்டிகையன்று உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம் என தமிழக அரசு கால நிர்ணயம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனினும், நேரக் கட்டுபாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக ஏராளமானோர் மீது மாநிலம் முழுவதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

  இந்நிலையில், சென்னையில் தீபாவளி தினத்தன்று வெடிக்கப்படும் பட்டாசுகளின் காரணமாக ஏற்படும் ஒலி மாசு கடந்த ஆண்டை காட்டிலும் அதிகரித்தும், காற்றின் மாசு குறைந்தும் உள்ளது என தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

  கடந்தாண்டு 78 டெசிபெல்லாக இருந்த ஒலி மாசு, நடப்பாண்டில் 89 டெசிபெல்லாக அதிகரித்துள்ளது. கடந்தாண்டு 777 ஆக இருந்த காற்றின் மாசு நடப்பாண்டில் 114 ஆக குறைந்துள்ளது என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

  முன்னதாக, கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் தீபாவளி தினத்தன்று சென்னையில் காற்று மாசு, 65 குறியீடாக பதிவாகி கடந்த ஆண்டை விட குறைந்து இருப்பதாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நேற்று மாலையில் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.