சென்னையில் கனமழை: வீடு இடிந்து விழுந்து பெண் பரிதாப பலி!

  0
  1
  இடிந்து விழுந்த வீட்டின் சுவர்

  தனது குழந்தைகள் மற்றும் தாயுடன் தூங்கி கொண்டிருந்த போது  கனமழை காரணமாக அவரது வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.

  சென்னை: சென்னையில் கனமழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

   தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்றிரவு முதல் மழை கொட்டி தீர்த்தது. இதையடுத்து சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் நேற்றிரவு முதல் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. விருகம்பாக்கம், போரூர், அண்ணா நகர்,  மீனம்பாக்கம், செம்பரம்பாக்கம், குரோம்பேட்டை, வடபழனி, கிண்டி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை  தொடர்ந்து பெய்து வருகிறது. இதேபோல் சென்னையை அடுத்த செங்குன்றம்,  மாதவரம், சோழவரம், , புழல், பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 

  rain

  இந்நிலையில் சென்னை மண்ணடி ஐயப்பசெட்டி தெருவைச் சேர்ந்த ஜெரினாபானு என்பவர்  அப்பகுதியில் உள்ள கோயிலுக்கு சொந்தமான இடத்தில் வீடுகட்டி வாழ்ந்து வந்துள்ளார். நேற்றிரவு தனது குழந்தைகள் மற்றும் தாயுடன் தூங்கி கொண்டிருந்த போது  கனமழை காரணமாக அவரது வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் ஜெரினாபானு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மற்றவர்கள் அதிர்ஷ்டவசமாகக் காயமின்றி உயிர் தப்பியுள்ளனர். 

  murder

  இதையடுத்து இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஜெரினாபானுவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.