சென்னையில் கனமழை: பள்ளிகள் விடுமுறையா?

  0
  1
  மழை

   காஞ்சிபுரம் மாவட்டத்திலும் வழக்கம்போல் பள்ளிகள் இயங்குகின்றன. 

  சென்னை: சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் வழக்கம்போல் பள்ளிகள் இயக்கும் என மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.

  rain

  வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்துவருகிறது . குறிப்பாகத் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்றிரவு முதல் மழை கொட்டி தீர்த்தது. இதையடுத்து சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் நேற்றிரவு முதல் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. விருகம்பாக்கம், போரூர், அண்ணா நகர்,  மீனம்பாக்கம், செம்பரம்பாக்கம், குரோம்பேட்டை, வடபழனி, கிண்டி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை  தொடர்ந்து பெய்து வருகிறது. இதேபோல் சென்னையை அடுத்த செங்குன்றம்,  மாதவரம், சோழவரம், , புழல், பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 

  rain

  இந்நிலையில் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார். அதேபோல்  காஞ்சிபுரம் மாவட்டத்திலும் வழக்கம்போல் பள்ளிகள் இயங்குகின்றன.