சென்னையில் ஒரு கிலோ ஆட்டிறைச்சி ரூ.950க்கு விற்பனை : அதிர்ச்சியில் சென்னை வாசிகள்!

  0
  3
  ஆட்டிறைச்சி

  பொதுவாக பல்வேறு மாநிலங்களில் இருந்து விற்பனைக்காக ஆடுகள் கொண்டு வரப்படும்.

  பொதுவாக பல்வேறு மாநிலங்களில் இருந்து விற்பனைக்காக ஆடுகள் கொண்டு வரப்படும். ஆனால் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், ஆடுகள் கொண்டு வரப்படுவது குறைந்துள்ளது. இதன் காரணமாக ஆட்டிறைச்சியின் விலை, அதிகமாக உயர்ந்துள்ளது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்னர், சென்னையில் கிலோ 600க்கு விற்கப்பட்டு வந்த ஆட்டிறைச்சி இப்போது, ரூ.950க்கு விற்கப்படுகிறது. மகாவீர் ஜெயந்தி பண்டிகையை முன்னிட்டு கடைகளை திறக்க வேண்டாம் என்றும் திறந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

  tttn

  மேலும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை சென்னையில் இறைச்சி கடைகள் மூடப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், திங்கள் கிழமை மட்டும் தான் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. கடந்த ஞாயிற்றுக் கிழமை இறைச்சி கடைகளில் அதிக கூட்டம் குவிந்ததால் , இறைச்சி கடைகள் மூடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.