சென்னையில் உள்ள ஃபீனிக்ஸ் மாலுக்கு மார்ச் 10 முதல் 17ஆம் தேதி வரை சென்று வந்தவர்களா நீங்கள்? உங்களுக்கான முக்கிய அறிவிப்பு…

  0
  1
  phoenix mall chennai

  தமிழகத்தில்  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 309 ஆக அதிகரித்துள்ளது . இன்று ஒரே நாளில் 75 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அந்த வகையில் தமிழகத்தில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், நெல்லை, கோவை  முதலிடத்திலும், சென்னை  ஈரோடு மாவட்டங்கள் 2ஆம் இடத்திலும் உள்ளன. இந்நிலையில் சென்னை வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மாலில் 6 ஊழியர்கள் கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் மாலில் உள்ள தோல் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் வேலைபார்த்து வந்ததாக தெரிகிறது. 

  chennai corporation

  இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மார்ச் 10 முதல் மார்ச் 17 வரை சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் மால் வணிக வளாகத்துக்கு குறிப்பாக லைப் ஸ்டைல் கடைக்கு சென்றவர்கள் கவனமாயிருக்க வேண்டும். மாலில் வேலை செய்யும் அனைத்து ஊழியர்களும் மிகக்கவனமாக இருக்க வேண்டும், கொரோனா அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் உடனே மருத்துவ உதவிக்கு கீழுள்ள கட்டுப்பாட்டு அறை எண்ணை அழைக்கவும்” என தெரிவித்துள்ளது.