செந்தில் பாலாஜி புத்திசாலின்னா, நாங்க கேனையனுங்களா? – நறநறக்கும் அமமுகவினர்

  0
  2
  TTV Dinakaran

  அதிமுகவில் எம்.எல்.ஏவாக இருந்தோம், இவர் பேச்சைக்கேட்டு ஆளுநரை சந்திக்கப்போய், பதவிபறிப்பில் முடிந்து, இடைத்தேர்தலில் தோற்றுப்போனபிறகு, நம்மைவிட்டு விலகிச்சென்ற ஒருவரை புத்திசாலி என்று தினகரனே சொன்னா, அப்போ எங்களை பார்த்தால் எப்படி இருக்கு உங்களுக்கு என இந்த 17 பேரும் தினகரனை கேட்பார்கள் என நம்புவோமாக.

  ‘புலி வருது புலி வருது’ மாதிரி ‘ஸ்லீப்பர் செல் வச்சிருக்கேன், ஸ்லீப்பர் செல் வச்சிருக்கேன்’ என்று  திரும்ப திரும்ப சொல்லிவருகிறார் அமமுகவின் தினகரன். நாடாளுமன்ற தேர்தலில் இல்லாவிட்டாலும், 22 தொகுதிகளின் இடைத்தேர்தலில் தன் திறமையை காட்டி அதிமுக ஆட்சியை கவிழ்ப்பார்-கட்சியை தன்வயப்படுத்துவார்-தேர்தல் வரும்-தேர்தலில் வெல்வார்-முதலமைச்சராவார்-நாம் அமைச்சராவோம் என மனகோட்டை கட்டியிருந்த 17 எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட அமமுகவினர் வாயடைத்துப் போயுள்ளனர் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு.

  Dinakaran

  அதுகூட பரவாயில்லை, தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்து தினகரன் வழக்கமான புன்முறுவலோடு ஒரு வார்த்தையை அசால்ட்டாக விட்டுவிட, கொதிப்பில் உள்ளனர் மற்ற முன்னாள் ரத்தத்தின் ரத்தங்கள். “கிட்டத்தட்ட 300 வாக்குச்சாவடிகளில் எங்கள் பூத் ஏஜென்ட்கள் ஓட்டுகூட வாக்கு எந்திரத்தில் பதிவாகவில்லை, இதை என்னவென்று சொல்வது” என வழக்கமான பல்லவியை பாடியவர் அடுத்து சொன்னதுதான் ஆச்சர்யம்.

  Senthil Balaji

  அமமுகவிலிருந்து விலகி அரவக்குறிச்சியில் திமுக சார்பாக நின்று வெற்றிபெற்றுள்ள செந்தில் பாலாஜி குறித்த கேள்விக்கு, “அது அவரின் புத்திசாலித்தனம்” என சர்வசாதாரணமாக தினகரன் சொல்லிவிட்டு போய்விட்டார். அதிமுகவில் எம்.எல்.ஏவாக இருந்தோம், இவர் பேச்சைக்கேட்டு ஆளுநரை சந்திக்கப்போய், பதவிபறிப்பில் முடிந்து, இடைத்தேர்தலில் தோற்றுப்போனபிறகு, நம்மைவிட்டு விலகிச்சென்ற ஒருவரை புத்திசாலி என்று தினகரனே சொன்னா, அப்போ எங்களை பார்த்தால் எப்படி இருக்கு உங்களுக்கு என இந்த 17 பேரும் தினகரனை கேட்பார்கள் என நம்புவோமாக.