செந்தில் பாலாஜி நன்றி கெட்டவர்: முதல்வர் பழனிசாமி தாக்கு

  0
  8
  palanisa

  திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜி ஒரு நன்றி கெட்டவர் என முதல்வர் பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

  சேலம்: திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜி ஒரு நன்றி கெட்டவர் என முதல்வர் பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

  ஜெ ஆட்சிக்காலமான 2011-16-ம் ஆண்டி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்து அவரது ம்றைவுக்கு பிறகு டிடிவி தினகரனின் வலதுகரமாக இருந்த செந்தில் பாலாஜி இன்று திமுகவில் இணைந்தார். ஸ்டாலின் மேல் கொண்ட ஈர்ப்பால் திமுகவில் இணைந்ததாக கூறினார். அவர் திமுகவில் இணைந்தது குறித்து டிடிவி தினகரன் கூறுகையில், நல்ல தம்பி செந்தில் பாலாஜி எங்கிருந்தாலும் வாழ்க என கூறியிருந்தார்.

  இந்நிலையில், சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, செந்தில் பாலாஜியை அமைச்சராக்கி அடையாளம் காட்டியது அதிமுகதான். அவர் அதிமுகவுக்கு துரோகம் செய்துவிட்டார். நன்றி மறப்பது நன்றன்று என்ற குறளுக்கு செந்தில் பாலாஜிதான் உதாரணம் என்றார்.