செந்தில் பாலாஜியை நினைத்து சூடு போட்டுக் கொண்ட தங்க தமிழ்செல்வன்..!

  0
  2
  தங்க தமிழ்செல்வன்

  செந்தில் பாலாஜி திமுகவுக்கு போனது முதல் செல்வாக்கான மனிதராகி விட்டார். அவருக்கு ஸ்டாலின் முக்கியத்துவம் தருகிறார்.

  அமமுகவில் இருந்து திமுகவுக்கு தங்க தமிழ்செல்வன் சென்று இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகி விட்டது. ஸ்டாலினை சந்தித்து இணைந்த போது அவரை பார்த்தது. இப்போது வரை சைலண்ட் மோடில் இருக்கிறார். எப்போதும் மீடியாக்களுக்கு பேட்டி தந்து வந்த தங்கம் திமுகவுக்கு சென்ற பிறகு பெட்டிப்பாம்பாய் அடங்கி விட்டார். senthil balaji

  தனது ஆதரவாளர்களிடம், ‘நான் அவசரப்பட்டு விட்டேன். திமுகவுக்கு வந்திருக்கக்கூடாது. அமமுகவில் இருந்தபோது யானை பலமாக இருந்தது.  திமுகவுக்கு போனதிலிருந்து  மீடியாக்காரர்கள் கூட  என்னைக் கண்டு கொள்ளவில்லை. அமமுகவில் இருந்த மரியாதை கூட திமுகவுக்கு வந்த பிறகு இல்லை.  திமுகவில் யாரும் என்னை மதிப்பதில்லை.  என்னை தனித்தே பார்க்கிறார்கள். செந்தில் பாலாஜி திமுகவுக்கு போனது முதல் செல்வாக்கான மனிதராகி விட்டார். அவருக்கு ஸ்டாலின் முக்கியத்துவம் தருகிறார். Thanga tamilselvan

  கரூரில் சீட் கொடுத்துஎம்.எல்.ஏ ஆகி விட்டார். அடுத்து அமைச்சர் பதவியும் உறுதி. திமுகவில் முக்கிய அசைண்மெண்ட் அவருக்கு தரப்படுகிறது. அதே வகையில் என்னை மதித்து நடப்பார்கள் என நினைத்தே நான் திமுகவுக்கு சென்றேன். ஆனால், செந்தில் பாலாஜிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் கால்வாசி கூட எனக்குக் கொடுக்கவில்லை. thanga tamilselvan

  கட்சியில் இணைந்தே சில வாரங்கள் தான் ஆகிறது. அதற்குள் இந்த நிலை என்றால் திமுகவில் நிலைத்து நீடிக்கமுடியுமா எனத் தெரியவில்லை’’ எனப் புலம்பி வருகிறாராம் தங்கம்.  வேறு கட்சிக்கு செல்வோருக்கு ஆரம்பத்தில் நிகழும் சங்கடங்கள்தான் பழகப் பழக சரியாகிவிடும் என்று ஒரு பக்கம் அவருக்கு ஆறுதல் சொல்லி வருகிறார்களாம் அவரது அடிப்பொடிகள்.