செந்தில் பாலாஜியை கழுத்தில் கை வைத்து தள்ளிய டிஎஸ்பி: தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்த தி.மு.க!

  0
  1
  செந்தில் பாலாஜி

  செந்தில் பாலாஜியின் கழுத்தில் கை வைத்துத் தள்ளிய டிஎஸ்பியை மாற்ற வேண்டும் எனத் தேர்தல் அதிகாரியிடம் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

  சென்னை: செந்தில் பாலாஜியின் கழுத்தில் கை வைத்துத் தள்ளிய டிஎஸ்பியை மாற்ற வேண்டும் எனத் தேர்தல் அதிகாரியிடம் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

  அதிமுக – திமுக மோதல்! 

  admk

  திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸின் கரூர்  வேட்பாளர் ஜோதி மணி நேற்று வேட்புமனு தாக்கல் செய்யச் சென்றார். அவருக்கு காலை 12.00 மணி  முதல் 1.00 மணி வரை  நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்னதாக 11.00 மணி முதல் 12.00 மணி வரை அ.தி.மு.க. எம்.பியும் தற்போதைய வேட்பாளருமான  தம்பிதுரைக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.

  டிஎஸ்பியுடன் செந்தில் பாலாஜி வாக்குவாதம்!

  senthil balaji

  இதனால் கரூர் மாவட்ட செயலாளர் மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜி தலைமையின் கீழ், காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, சரியாக பிற்பகல் 12.00 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய  ஆட்சியர் அலுவலகம் சென்றார். ஆனால்  அவருக்கு அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. 
  அப்போது உடனிருந்த செந்தில் பாலாஜி அலுவலகம்  உள்ளே செல்ல முற்பட அங்கு லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆனால்  காவல்துறை தரப்போ, ஜோதி மணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தபோது, ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்ய வந்த தம்பிதுரை அங்கே இருந்ததால் ஜோதி மணியை  அனுமதிக்கவில்லை என்றனர். அதிமுக – திமுக கூட்டணி வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் அங்கு வந்ததால் அங்கு சற்று பரபரப்பு காணப்பட்டது. 

  திமுக கோரிக்கை மனு!

  satyabarat sahoo

  இந்நிலையில் செந்தில் பாலாஜி மீது கை  வைத்து தள்ளி விட்ட  டிஎஸ்பி-யை பணியிடை மாற்றம் செய்ய வேண்டும் என்று சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவை சந்தித்து திமுக சட்டத்துறைச் செயலர் ஆர்.எஸ்.பாரதி கோரிக்கை வைத்தார். 

  எங்களால் தேர்தலை சந்திக்க முடியாது!

  barathi

  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘ தமிழகத்தில் பல காவல்துறை அதிகாரிகள் அதிமுகவின் ஆட்களை போலவே  செயல்படுகிறார்கள். அதிலும்  கரூர் மாவட்ட டிஎஸ்பி கும்பராஜா நேற்று வேட்புமனுத் தாக்கலின்போது எங்கள் மாவட்டப் பொறுப்பாளர் செந்தில் பாலாஜியின் கழுத்தில் கை வைத்துத் தள்ளியுள்ளார். அவர் கடந்த 10 ஆண்டுகளாகக் கரூரில்  டிஎஸ்பியாகப் பணியாற்றி வருகிறார். அதிமுகவின் தயவால் வாழும் அவரை வைத்து கொண்டு எங்களால் தேர்தலை சந்திக்க முடியாது. அதனால் அவரை பணியிடை மாற்றம் செய்ய வேண்டும்.  அதேபோன்று முன்னதாக திமுக சார்பில் கொடுக்கப்பட்ட  காவல்துறை உயர் அதிகாரிகள் 10 பேரை மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளோம்’ என்று தெரிவித்தார். 

   

  இதையும் வாசிக்க: முதல்வர் மேசை மேலே ஏறி டான்ஸ் ஆடுனவருதான் ஸ்டாலின்: முதல்வர் எடப்பாடி மரண கலாய்!