’செட் பிராப்பர்ட்டி’யான விஜயகாந்த்… சிசிடிவி கேமரா வைத்து கண்காணிப்பு..!

  0
  1
  விஜயகாந்த்

  அடுத்து மக்களவை தேர்தல் நேரத்தில் தே.மு.தி.க., சார்பில் கூட்டணி பேச்சு நடத்தவும், தொகுதி பங்கீட்டுக்கும், விஜயகாந்த் ஒரு குழுவை போட்டார்.

  சென்னை, கோயம்பேடு தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கு விருப்ப மனு கொடுத்துள்ளார்கள். இதை அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த்  தன் அறையில உட்கார்ந்து, ‘சிசிடிவி’ கேமரா வழியாக பார்த்துக்கொண்டே இருந்திருக்கார்.

  vijayakanth

  மனு கொடுத்த சிலர், விஜயகாந்தை பார்த்து அவருடன் போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கேட்க, உடனே அனுமதி கொடுத்திருக்கிறார்கள். முன்பெல்லாம், இதற்காக பெரிய போராட்டமே நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.  போட்டோ எடுக்க வந்தவர்களிடம் ‘எந்த ஊரு, என்ன பதவியில இருக்கீங்க, என்ன தொழில் பண்றீங்க’ என விசாரித்த விஜயகாந்த் கடைசியாக, ‘எவ்வளவு செலவு பண்ணுவீங்க’ எனவும் கேட்டு இருக்கிறார்.

  கணிசமான தொகையை சொன்னவர்கள் பெயர்களை, பக்கத்தில் இருந்த உதவியாளரை குறித்துக் கொள்ளச் சொல்லியிருக்கார். பெட்டி நிறைய பணம் வைத்திருந்தால் தான் தேர்தலில் நிற்க முடியும் என்பதை அறியாதவரா விஜயகாந்த். 

  edappadi

  அடுத்து மக்களவை தேர்தல் நேரத்தில் தே.மு.தி.க., சார்பில் கூட்டணி பேச்சு நடத்தவும், தொகுதி பங்கீட்டுக்கும், விஜயகாந்த் ஒரு குழுவை போட்டார். ஆனால், விஜயகாந்த் மனைவி பிரேமலதாவும், அவரது மச்சான் சுதீஷும் தான் அனைத்தையும் பார்த்துக் கொண்டார்கள். அமைத்த குழுவை டம்மியாக்கி விட்டார்கள். அதே போல, இப்போதும் உள்ளாட்சி தேர்தலுக்கும், விஜயகாந்த் ஒரு குழு போட்டிருக்கிறார். இந்த முறையாவது, நம்மை பேச்சுக்கு அழைத்துச் செல்வார்களா? அல்லது ‘செட் பிராப்பர்ட்டி’ மாதிரி ஆக்கி விடுவார்களா என குழு உறுப்பினர்கள் குமுறிக் கொண்டு இருக்கிறார்கள்.