செட்டிநாடு ஸ்பெஷல் : மா இஞ்சி, கொண்டைக் கடலை மண்டி 

  0
  1
  maa inji mandi

  சுவையான மா இஞ்சி, கொண்டைக் கடலை மண்டி செய்வது எப்படி என்பதைப் பார்க்கலாம் வாங்க 

  சுவையான மா இஞ்சி,கொண்டைக் கடலை மண்டி செய்வது எப்படி என்பதைப் பார்க்கலாம் வாங்க 

  தேவையான பொருட்கள்:

  கொண்டைக்கடலை- 250 கிராம் 
  மா.இஞ்சி- 100 கிராம்
  சின்ன வெங்காயம்- 100 கிராம் 
  பூண்டு- 10 பல் 
  தக்காளி- 3 
  மிளகாய்த்தூள்- ஒரு டீஸ்பூன்
  மல்லி தூள்- ஒரு டீஸ்பூன் 
  எண்ணெய்- ஒரு குழிக்கரண்டி
   உப்பு – தேவையான அளவு 
  தாளிக்க- கடுகு,உளுத்தம்பருப்பு,பெருங்காயம் 
  கருவேப்பிலை ஒரு ஒரு ஆர்க்கு 

  செய்முறை:

  கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊற வைத்து மஞ்சள் தூள் உப்பு சேர்த்து வேக வைக்கவும். வாணலியில் எண்ணெய் காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் கறிவேப்பிலை, தாளித்து அதில் பாதியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டை போட்டு வதக்கிச் சிறு துண்டுகளாக நறுக்கிய மா.இஞ்சியைப் போட்டு நன்றாக வதக்கி உப்பு, மல்லி தூள் வேண்டிய அளவு தண்ணீர் சேர்த்து கடலையை சேர்த்து நன்றாக வெந்து கெட்டியாக வந்ததும் இறக்கவும்.