சூரிய வெளிச்சத்தில் பழங்களைச் சாப்பிடலாமா? 

  0
  2
  பழங்கள்

  பீட்சா, பர்கர் என்று சாப்பிட பழகியப் பிறகு பழங்களை மறந்து விட்டோம்.  பழங்களை தினசரி சாப்பிடும் பழகத்தையே அடுத்த தலைமுறை மறந்து விட்டது. 
  உணவாகவும், மருந்தாகவும் செயல்பட்டு நிறைவான ஊட்டச்சத்துக்களையும் தருவது பழங்கள் தான்.  ‘நான் நாளொன்றுக்கு இரண்டு, மூன்று டம்ளர் ஜூஸ் குடிக்கிறேனே’ என்று பெருமிதம் பேசுபவர்கள் எல்லாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள், நீங்கள் குடிக்கிற ஜூஸ்களில் எல்லாம் சத்துக்கள் நிச்சயமாக கிடையாது.

  பீட்சா, பர்கர் என்று சாப்பிட பழகியப் பிறகு பழங்களை மறந்து விட்டோம்.  பழங்களை தினசரி சாப்பிடும் பழகத்தையே அடுத்த தலைமுறை மறந்து விட்டது. 
  உணவாகவும், மருந்தாகவும் செயல்பட்டு நிறைவான ஊட்டச்சத்துக்களையும் தருவது பழங்கள் தான்.  ‘நான் நாளொன்றுக்கு இரண்டு, மூன்று டம்ளர் ஜூஸ் குடிக்கிறேனே’ என்று பெருமிதம் பேசுபவர்கள் எல்லாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள், நீங்கள் குடிக்கிற ஜூஸ்களில் எல்லாம் சத்துக்கள் நிச்சயமாக கிடையாது.

  fruits

  எந்த பழமாக இருந்தாலும், அதை அப்படியே கடித்துச் சாப்பிடுவதில் தான் சத்துக்கள் அடங்கியிருக்கிறது. மாம்பழச் சாறு குடித்தால், அதில் இருக்கும் நார்சத்துக்களை என்ன செய்வீர்கள்… சக்கையாக்கி குப்பையில் போட்டப் பிறகு தான் பழச்சாறு உங்கள் கைக்கு வரும். அனைத்துப் பழங்களுமே அந்த ரகம் தான்.
  தவிர, பழங்களில் முழு சத்தும், அதைப் பழமாக சாப்பிடும் போது தான் கிடைக்கிறது. சர்க்கரை, ஐஸ் எல்லாம் போட்டப் பிறகு அது பந்தாவுக்காகவும், தொண்டை ஜில்லென்று நனைப்பதற்காகவும் குடிகின்ற பானமாகத் தான் மாறுகிறது.

  fruit juice

  இன்னும் தெளிவாகச் சொன்னால், வைட்டமின் ‘சி’ அதிகமிருக்கிற பழங்களை எல்லாம் அப்படியே, உடனுக்குடன் சாப்பிட்டு விட வேண்டும். சூரிய வெளிச்சத்திலும், காற்றிலும் கூட வைட்டமின் ‘சி’ சக்தி முழுமையாகக் கிடைக்காது. ஏனெனில்,  சூரிய வெளிச்சமும், காற்றும் வைட்டமின் ‘சி’  சத்துக்கு எதிராக செயல்படகூடியவை தான் . எனவே வைட்டமின் சி நிறைவாக உள்ள பழங்களை உடனடியாக சாப்பிட்டுவிட வேண்டும். நீண்ட நேரம் வைத்திருக்ககூடாது.
  பழங்களில் மிகக் குறைந்த அளவில் கொழுப்புச்சத்தும்  அதிக அளவில் நார்ச்சத்தும் இருக்கிறது. தொடர்ச்சியாக பழங்களைச் சாப்பிட்டு வந்தால், இதயநோய் , உடல் பருமன், செரிமான குறைபாடு, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் நம் உடலுக்குள் எட்டிப் பார்க்காது. கோடையின் வெப்பத்தை தணிக்க தர்ப்பூசணி, கிர்ணி என அந்தந்த பருவத்துக்கு ஏற்ப இயற்கையே பழங்களை வாரி வழங்கி இருக்கும் நிலையில் தினமும் தொடர்ந்து பழவகைகளைச் சாப்பிடுவதே சிறந்தது.

  fruits

  மாரடைப்பு உள்ளிட்ட இதயநோய்கள் பக்கவாதம், சில வகை புற்றுநோய் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்பை ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்கள் குறைக்கிறது.
  பழங்களில் பொட்டாசியம் நிறைவாக உள்ளதால் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது. மேலும் சிறுநீரகத்தில் கல் உருவாவதற்கான வாய்ப்பையும் குறைக்கிறது. வயிறு நிரம்பிய உணர்வை தந்தாலும் இதில் கலோரி மிகமிகக் குறைவாகவே உள்ளது. இதனால் பழம் சாப்பிட்டால் பருமன என்ற கவலை இல்லை.
  பருக்கள் வருவதை தடுக்க நினைப்பவர்கள் வைட்டமின் ஏ சத்து நிறைந்த காய்கறி, பழங்களை எடுத்துக் கொள்வதில் கவனம் செலுத்தவேண்டும்.    பழங்களை தினமும் சேர்த்துக் கொள்வோம். நல்ல ஆரோக்கியம் பெறுவோம்.