சுவையான பன்னீர் பஜ்ஜி எப்படி செய்வது? 

  0
  1
   பன்னீர் பஜ்ஜி

  பஜ்ஜி என்றாலே அனைவருக்கும் பிடித்த ஒன்று. அந்த வகையில் பெரும்பாலும் வாழைக்காய், உருளைக்கிழங்கு, மிளகாய் போன்றவற்றைக் மட்டும் தான் பஜ்ஜி செய்து சாப்பிட்டிருப்போம். ஆனால் பன்னீரைக் கொண்டு கூட பஜ்ஜி செய்ய முடியும் என்று நம்மில் எதனை பேருக்கு தெரியும். மேலும் பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைக்கு ஒரு சிறந்த ஸ்நாக்ஸாக இருக்கும். 

  தேவையான பொருட்கள்: 

  பன்னீர் – 200 கிராம்
  கடலை மாவு – 150 கப்  
  மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
  பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன்
  மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்  
   உப்பு,எண்ணெய் – தேவையான அளவு

  செய்முறை: 

   பன்னீர் பஜ்ஜி

  பன்னீரை நீளவாக்கில் துண்டம் போடவும். பின்பு கடலை மாவு, பெருங்காயம், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கையால் கிளறி, அளவாகத் தண்ணீர் ஊற்றி மாவை கெட்டியாக கரைக்கவும். கடைசியாக பன்னீர் துண்டுகளை ஒவ்வொன்றாக நனைத்து காயும் எண்ணெயில் போட்டு சிவக்க வறுத்து எடுக்கவும்.

  குறிப்பு: 
   
  பன்னீருக்கு பதிலாக உருளைக் கிழங்கு, வாழைக்காய், காளி பிளவர், வெங்காயம், பஜ்ஜி மிளகாய், ஆப்பிள் போடலாம்.