சுவையான காளான் வறுவல்… சுலபமான ரெசிப்பி!

  0
  31
   காளான் வறுவல்

  கடையில் வாங்கிய காளான் என்றாலும்,காட்டில் பிடுங்கிய காளான் என்றாலும் ,அதை சுத்தம் செய்து கறிக்குழம்பு போலவே சமைத்தால் மிகவும் சுவையாக இருக்கும்.ஆனால் , வேலை அதிகம்.அதே காளானை சுலபமாக,ஐந்தே நிமிடத்தில் செய்வது எப்படி?

  காளானை ஒரு அரை மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள்.

  mushroom

  வேறென்ன வேண்டும்?

  காய்ந்த மிளகாய்
  எண்ணெய்
  கடுகு
  கறி வேப்பிலை
  உப்பு

  அவளவுதான்.

  எப்படிச் செய்வது?

  kaalan

  சட்டியை அடுப்பில் வைத்து,அது சூடானதும் எண்ணை ஊற்றுங்கள்.
  கடுகு, கறிவேப்பிலை போட்டு வெடிக்க விடுங்கள் காய்ந்த மிளகாயைக் 
  கிள்ளிப் போடுங்கள்,ஒரு நிமிடம்,  கா.மிளகாய் கருகாமல் எண்ணெயில் புறட்டுங்கள்.

  சுத்தம் செய்து வைத்திருக்கும் காளானை தண்ணீர் இல்லாமல் நன்றாகப்  பிழிந்து சட்டியில் போடுங்கள்.அளவாக உப்புச் சேர்த்து கிளறுங்கள்.
  காளானில் இருந்து தண்ணீர் வெளிப்படும்.அந்த நீர் வற்றும் வரை கிளறிவிட்டு 
  அடுப்பை அனைத்து விடுங்கள்.

  எளிமையான சைடிஷ் இது.இதில் எந்தவிதமான மசாலாவும் சேர்க்காததால் இயற்கையான காளானின் சுவையை அனுபவிக்கலாம்.