சுற்றுச்சூழல் விவகாரம்: இந்தியா மீது பாயும் டிரம்ப் 

  0
  5
  ஓ.பி.எஸ்

  உலக அளவில் சுற்றுச்சூழல் மாசு அதிகரித்து வரும் சூழலில், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக இந்தியா, சீனா எதையும் செய்யவில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
  புவி வெப்ப மயமாதலைத் தவிர்க்க, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

  உலக அளவில் சுற்றுச்சூழல் மாசு அதிகரித்து வரும் சூழலில், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக இந்தியா, சீனா எதையும் செய்யவில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
  புவி வெப்ப மயமாதலைத் தவிர்க்க, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், டிரம்ப் அமெரிக்க அதிபர் ஆன பிறகு அந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார். தொடர்ந்து சுற்றுச்சூழல் விவகாரத்தில் எதிர்ப்பாகவே பேசி வருகிறார்.

  trump

  இந்த நிலையில், நியூயார்க்கில் நடந்த பொருளாதார கருத்தரங்கில் டிரம்ப் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம் ஒரு தரப்பாக உள்ளது. இதனால் அமெரிக்காவுக்கு கோடிக்கணக்கில் இழப்பும், அமெரிக்கர்களுக்கு வேலை இழப்பும் ஏற்படும். இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், அதிக புகை வெளியிடும் தொழிற்சாலைகளை கட்டுப்படுத்தவும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நாடுகள் கடலில் கொட்டும் குப்பைகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் வரை மிதந்துவந்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன. 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு காற்று மாசு ஏற்பட்டுள்ளது” என்றார்.