சுர்ஜித்திற்கு அஞ்சலி செலுத்திய முதலமைச்சர்! 

  0
  1
  Sujith

  திருச்சி: நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சுர்ஜித் குடும்பத்திற்கு முதல்வர் பழனிசாமி நேரில் சென்று ஆறுதல் ஆறுதல் கூறினார். மேலும் சுர்ஜித்தின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

  திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் கடந்த 25 ஆம் தேதி மாலை  5.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித் உயிரிழந்தான்.  5 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு நேற்றிரவு 2.30 மணியளவில் சுர்ஜித் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து குழந்தையின் உடல் மீட்கப்பட்டு பின் பிரேத பரிசோதனைக்கு முடிவுற்றபின் நல்லடக்கம் செய்யப்பட்டது. தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் சுர்ஜித்தின் இல்லத்திற்கு சென்று அவர்களது பெற்றொர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

  surjith

  அந்தவகையில் தற்போது முதலமைச்சர் பழனிசாமி சுர்ஜித்தின் இல்லத்திற்கு சென்று, அவர்களது பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார். அதன் பின் அங்கு வைக்கப்பட்டிருந்த சுஜித்தின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.