சுருங்கிய ஸ்டாலின்.. திமுகவின் முதல்வர் கனவு எப்போதுமே பலிக்காதா? உதயநிதி அட்ராசிட்டி!

  0
  7
  உதயநிதி ஸ்டாலின்

  ஆட்சியில் இல்லாத போதும் கட்சியை கட்டி காப்பாற்றி வந்ததில் கைதேர்ந்தவர் கலைஞர் கருணாநிதி. எம்ஜிஆரை எதிர்த்து, ஆட்சியில் இல்லாமல் இருந்த சமயங்களிலும் கூட கருணாநிதியின் விரலசைவிற்காக லட்சக் கணக்கான திமுக தொண்டர்கள் தயாராக இருந்தார்கள். அதே போல் கலைஞர் கருணாநிதி நன்கு செயல்பட்டுக் கொண்டிருந்தவரை அவரே திமுக எனும் காட்டுக்கு ராஜாவாக வாழ்ந்து வந்தார்.

  திமு கழகத்தைத் தோற்றுவித்த அறிஞர் அண்ணா மறைந்து 50 ஆண்டுகளைக் கடந்த பின்னரும் கூட கருணாநிதி, அண்ணாவுக்கான மரியாதையை தன் கடைசி பேச்சும், மூச்சும்  இருக்கும் வரை செவ்வனே செய்து வந்தார்.  கட்சியின் சார்பாக ஒட்டப்படுகிற சுவரொட்டிகளானாலும் சரி, பேனர்களானாலும் சரி அண்ணாவின் புகைப்படத்திற்கு உரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கட்சி தொண்டர்களை அறிவுறுத்தியிருந்தார். இதனால் தான் அதிமுக ஜெயலலிதாவின் பேனர் கலாசாரங்களில் இருந்து திமுக வேறுபட்டு இருந்தது. உதயநிதி ஸ்டாலின்

  கருணாநிதியின் பேச்சும் மூச்சும் நின்றது, ஸ்டாலின் செயல் தலைவர் ஆன பின்னர் கருணாநிதியின் படங்களை விட ஸ்டாலினின் படங்கள் போஸ்டர்களில் பெரிய சைஸில் ஆக்கிரமிக்க துவங்கின. இப்போது ஸ்டாலினின் படம் திமுக சுவரொட்டிகளிலும், பேனர்களிலும் சிறியதாக்கப்பட்டு மூன்றாம் கலைஞர் என்று நெட்டிசன்கள் கலாய்க்கும் உதயநிதி ஸ்டாலினின் படங்களும், மூன்றாம் அன்பிலார் என்று கூறப்படும் அன்பில் மகேஷ் படங்களும் பிரதானமாகி வருவதாக குமுறுகின்றனர் உடன் பிறப்புகள். ஆனால், ஸ்டாலினோ இப்போதே பெரியார், அண்ணா, கலைஞர் வரிசையில் ஸ்டாம்ப் சைசுக்கு ஆக்கப்பட்ட அவலம் ஸ்டாலினுடன் இருப்பவர்களை முகம் சுளிக்க வைக்கிறது. உதயநிதி ஸ்டாலின்

  கட்சி தொண்டர்கள் ஏற்கெனவே உதயநிதியின் வளர்ச்சியை அங்கலாய்ப்பாய் தான் பார்த்து வருகிறார்கள். லட்சக்கணக்கான தொண்டர்கள் ரத்தம் சிந்தி, உயிரையும் கொடுத்து வளர்த்து வந்த கழகம் இப்படி சின்னப் பிள்ளைகளின் கூடாரமாக போய்விட்டதே என்கிற விரக்தியில் இருக்கிறார்கள் தொண்டர்கள். 
  இத்தனைக்கும் ஸ்டாலின் இன்னும் முதல்வராக கூட ஆகவில்லை. அதற்குள் அவருக்கு “ஸ்டாம்ப்” ப்ரமோஷன் கொடுக்கும்  “மூன்றாம்” பட்டத்தினரின் வேகம் உடன் பிறப்புகளின் வயிற்றில் புளி கரைக்கின்றதாம்.  இது எங்கே போய் முடியுமோ, இந்த நிலை நீடித்தால் எடப்பாடி மகன் கூட முதல்வராகும் வரை ஆகிவிடுமோ என அச்சம் மேலிடுகின்றதென அங்கலாய்க்கின்றனர் உடன் பிறப்புகள்.