சுபஸ்ரீ மரணத்திற்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்: உயர் நீதி மன்றம்..

  0
  1
  Subashree death

  உயர் நீதிமன்ற நீதிபதிகள், சுபஸ்ரீயின் மரணத்தில் அலட்சியமாக செயல் பட்ட அதிகாரிகள் மீதும் பேனர் வைத்த நபர் மீதும் ஏன் இன்னும் எந்த  நடவடிக்கையும் எடுக்கப் பட வில்லை என தமிழிக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.

  சென்னை பள்ளிக்கரணை அருகே சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீது பேனர் விழுந்ததால் அவர் எதிரே வந்த லாரியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை கண்டித்த உயர்நீதி மன்றம் அதிகார பூர்வமான ஒப்புதல் இல்லாமல் பேனர் வைக்க கூடாது என்றும் பேனர் வைத்தவர்கள் மீதும் அலட்சியமாக செயல் பட்ட மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீதும்  நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டது. 

  Subasree

  மீண்டும் இன்று விசாரணைக்கு வந்த அந்த வழக்கில், உயர் நீதிமன்ற நீதிபதிகள், சுபஸ்ரீயின் மரணத்தில் அலட்சியமாக செயல் பட்ட அதிகாரிகள் மீதும் பேனர் வைத்த நபர் மீதும் ஏன் இன்னும் எந்த  நடவடிக்கையும் எடுக்கப் பட வில்லை என தமிழிக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், இந்த வழக்கு குறித்து தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று  உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.