சுஜித் மரணம் குறித்து முதல்வர் மனசாட்சியுடன் பதில் அளிக்க வேண்டும்: முக ஸ்டாலின் அறிக்கை…

  0
  1
  MK Stalin

  குழந்தை விழுந்து 6 மணி நேரம் ஆன பிறகு தேசிய பேரிடர் குழு அழைக்கப்பட்டது ஏன்?

  சிறுவன் சுஜித்தின் மரணம் குறித்து பல்வேறு கருத்துகள் எழுந்து வரும் நிலையில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ‘ குழந்தை சுஜித் மரணத்தில் எழுந்துள்ள கேள்விகளுக்கு உரிய பதில் சொல்லாமல் முதலமைச்சர் தப்பித்துக் கொள்ள முடியாது. கோபத்தின் உச்சத்தில் இருக்கும் மக்களின் கேள்விக்கு மனசாட்சியுடன் பதில் சொல்லியே ஆக வேண்டும்..! இதற்கும், அனைத்தும் பொய் என ஒரே போடாக போட்டுவிட்டுக் கடந்து போகக் கூடாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்குக் கழகத் தலைவர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள்!’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

   

  அதில், சிறுவன் சுஜித்தின் மரணத்தில் அதிமுக அரசு மெத்தனம் காட்டியது என நான் கேள்வி கேட்டால் முதலமைச்சர் கோவப் படுகிறார். அதற்கு, ஸ்டாலின் என்ன பெரிய விஞ்ஞானியா?! என்று அர்த்தமற்ற கேள்வியைக் கேட்கிறார் என்று அறிக்கையைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், குழந்தை விழுந்து 6 மணி நேரம் ஆன பிறகு தேசிய பேரிடர் குழு அழைக்கப்பட்டது ஏன்? மீட்புக் குழுவினரை விமானத்தில் அழைத்து வராமல், காலம் தாழ்த்தி வரவழைத்தது ஏன்? என்பது உள்ளிட்ட 9 கேள்விகளுக்குத் தமிழக அரசு மனசாட்சியுடன் பதில் அளிக்க வேண்டும் என்று மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.