சுஜித் இறப்புக்கு அவனது பெற்றோர் தான் காரணம்: அதிமுக அமைச்சர் குற்றச்சாட்டு!

  0
  4
  சுஜித்

  அதிமுக  100% வெற்றி பெறும்  என்றும் எங்கள் கட்சியில் தனிப்பட்ட விருப்பம் என்று எதுவும் கிடையாது.

   ஸ்ரீவில்லிப்புத்தூர்:  சுஜித்தின் மரணம் பெற்றோரின் அஜாக்கிரதையால் நடந்தது என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். 

  sujith

  திருச்சி மணப்பாறை நடுகட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து 5 நாட்கள் பிறகு சடலமாக மீட்கப்பட்ட சுஜித்தின் மரணம் தமிழகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது. சுஜித்தின் மரணம் ஏற்பட காரணம் மீட்பு பணியில் ஏற்பட்ட தொய்வா? அல்லது பெற்றோரின் அஜாக்கிரதையா? என்ற கோணத்தில் பலரும் பல விமர்சனங்களை முன்வைத்து வந்தனர்.

  kadambur

  இந்நிலையில் தமிழக செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது சுஜித்தின் மரணம் குறித்து பேசிய அவர், ‘சுஜித்தின் மரணம் பொது இடத்தில் நடந்த விபத்து கிடையாது. பெற்றோரின் அஜாக்கிரதையால் நடந்தது’ என்றார். தொடர்ந்து உள்ளாட்சி தேர்தல் குறித்து பேசிய அவர், உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறும். அதில் அதிமுக  100% வெற்றி பெறும்  என்றும் எங்கள் கட்சியில் தனிப்பட்ட விருப்பம் என்று எதுவும் கிடையாது. அதனால் தலைமை எடுக்கும் முடிவுகளுக்குத் தான் கட்டுப்படுவோம்’ என்றார். மேலும் திரைப்படங்களுக்குச் சிறப்பு காட்சி என்று ஒரு காட்சிக்கு அனுமதி வாங்கிவிட்டு, பல காட்சிகள்  ஒளிபரப்பப்படுகிறது. இனி இதை நடைமுறைப்படுத்தி கட்டணம் வசூலிக்கப்படும்’ என்று தெரிவித்தார்.