சுஜித்தின் இழப்பு தேவையில்லாதது உயிரிழப்பு: லதா ரஜினிகாந்த் ஆதங்கம்!

  0
  3
  லதா ரஜினிகாந்த்

  சுஜித் விஷயத்தில் சாதி, மாதம் கடந்து அனைவரும் ஒற்றுமையுடன் ஒன்றுபட்டு இருந்தோம்.

  சென்னை:  சுஜித்தின் இழப்பு தேவையில்லாத உயிரிழப்பு என்று லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

  ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் 5 நாட்கள்  போராட்டத்திற்குப் பிறகு சடலமாக மீட்டெடுக்கப்பட்டான். இதையடுத்து சுஜித்தின்  உடல்  இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. குழந்தையை  மீட்க வேண்டும் என்று ஒரே நோக்கத்தோடு இரவு பகல் பாராமல் உழைத்த அத்தனை பேருக்கும் சுஜித்தின் மரணம் மீளா துயரை தந்துள்ளது. 

  sujith

  இந்நிலையில் லதா ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘சுஜித்தின் இறுதி நேர தவிப்பை வார்த்தைகளில்  சொல்லமுடியாது. சுஜித்தின் இழப்பு தேவையில்லாத இழப்பு.  ரஜினிகாந்த் சுஜித் குறித்து என்னிடம் கேட்டுக்கொண்டே இருந்தார்.  குழந்தைகளுக்காக மட்டுமே முழுநேரம் செயல்படும் குழுவை அமைக்கவுள்ளோம். பெற்றோர்களின் பாதுகாப்பு இல்லாமல் குழந்தைகளை  விளையாட  அனுப்ப கூடாது. சுஜித் விஷயத்தில் சாதி, மாதம் கடந்து அனைவரும் ஒற்றுமையுடன் ஒன்றுபட்டு இருந்தோம். ஆனால்  எது நடக்கக் கூடாது என்று நினைத்தோமோ அது நடந்து விட்டது’ என்றார். 

  latha

  முன்னதாக ரஜினிகாந்த் சுஜித்தின் மரணம் மனதிற்கு மிகவும் வேதனையளிக்கிறது என்று பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.