சுகாதாரமான முறையில் சைனீஸ் ஃப்ரைட் ரைஸ் செய்வது எப்படின்னு தெரியுமா!?

  0
  2
  சைனீஸ் ஃப்ரைட் ரைஸ்

  பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட,பதப்படுத்தப்பட்ட உணவுகள் அனைத்துமே உங்கள் உடலுக்கு தீமை விளைவிக்கக்கூடியவை.அதிலும் சைனீஸ் உணவு வகைகளில் சுவைக்காக சேர்க்கப்படும் சில பொருள்களும்,செயற்கை நிறமிகளும் ரொம்ப டேஞ்சரானவை.

  பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட,பதப்படுத்தப்பட்ட உணவுகள் அனைத்துமே உங்கள் உடலுக்கு தீமை விளைவிக்கக்கூடியவை.அதிலும் சைனீஸ் உணவு வகைகளில் சுவைக்காக சேர்க்கப்படும் சில பொருள்களும்,செயற்கை நிறமிகளும் ரொம்ப டேஞ்சரானவை.

  chinese fried rice

  ஸ்டார் ஹோட்டல் என்றாலும் அதிலும் பல இடங்களில் சொதப்பலாகதான் இருக்கும்.ஃபாஸ்ட் ஃபுட் கடைகள் பற்றி சொல்லவே வேண்டாம்.அது பற்றி தனியாகவே நிறைய எழுதலாம்.இப்படியான சூழலில் சைனீஸ் ஃபுட்தான் வேணும்னு உங்க குழந்தைகள் அடம்பிடிச்சால் சுகாதாரணமான முறையில் நீங்களே வெரைட்டியான ‘chinese fried rice’ செய்து கொடுக்கலாம்.எப்படி செய்வது…?

  தேவையான பொருட்கள் 
   
  பிரியாணி அரிசி – 1 கப் 
  பச்சை பட்டாணி – 1/2 கப் உரித்தது 
  ஸ்ப்ரிங் ஆனியன் – 1 கட்டு 
  கேரட் – 1
  குடை மிளகாய் – 2
  பெரிய வெங்காயம் – 1
  நெய் – 2 tbsp 
  உப்பு – தேவையான அளவு 

  செய்முறை 

  கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானவுடன் வெங்காயத்தை வதக்கவும். பின் ஸ்பிரிங் ஆனியனையும் வதக்கி அத்துடன் மீதமுள்ள காய்கறிகளையும் சேர்த்து வதக்கவும்.

  chinese fried rice

  காய்கறிகள் அரை பதமாக வெந்தவுடன், உப்பு,சர்க்கரை,ஸ்பிரிங் ஆனியன் மூன்றையும் சேர்த்து கிளறவும்.அதன்பிறகு ஒரு தனி கடாயில் எண்ணெய் ஊற்றி அரிசியை அதில் போட்டு  வதக்கவும்.ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி 2 விசிலுக்கு குக்கரில் வேக விடவும்.பக்குவப்படுத்தப்பட்ட அரிசியுடன் வதக்கிய காய்களையும் சேர்த்து நன்றாக கிளறினால்  சைனீஸ் ஃப்ரைட் ரைஸ் ரெடி! இதை  சூடாக சாப்பிடும்போது அவ்வளவு சுவையாக இருக்கும்.

  இதையும் படிங்க: ரத்தம்…குடல்…நுரைஈரல்… அட்டகாசமான ‘த்ரி இன் ஒன்’ அசைவ பொரியல்!