சீயான் விக்ரமின் கடராம் கொண்டான் திரைப்படம் எப்போ ரிலீஸ் தெரியுமா?

  0
  1
  விக்ரம்

  நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கடராம் கொண்டான் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

  சென்னை: நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கடராம் கொண்டான் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

  கடந்த ஆண்டு வெளியான சாமி ஸ்கொயர் படத்திற்குப் பிறகு விக்ரம் நடித்துள்ள எந்த படமும் வெளியாகவில்லை. அது மட்டுமின்றி அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘கடாரம் கொண்டான்’ திரைப்படமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. 

  கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் மற்றும் டிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இதில் அக்ஷரா ஹாசன், நாசரின் மகன் அபி ஹாசன் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் பொங்கல் பண்டிகையின் போது படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றது. 

  vikram

  அதைத்தொடர்ந்து இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்குமாறு ரசிகர்கள் கோரிக்கை வெய்து வந்தனர். இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. 

  ஆம்… ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து இருந்த இந்த படம் வரும் ஜூலை.19ம் தேதி வெளியாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படத்தின் டீஸர் வரும் ஜூலை.3ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பாக்கப்படுகிறது.