சீமான் மீது வழக்குப்பதிவு: தேர்தல் அதிகாரி அறிவிப்பு!

  0
  1
  Seeman

  காங்கிரஸ் கட்சியினர் சீமானுக்குக் கண்டனம் தெரிவித்து அவரை கைது செய்ய வேண்டும் என்று விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

  இரண்டு நாட்களுக்கு முன்பு, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விக்கிரவாண்டி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய சீமான், ராஜீவ்காந்தி அமைதிப் படையை என்ற பேரில் அநியாயப்படையை கொண்டு வந்து என் நாடு மக்களைக் கொன்று குவித்தார். அதனால், அவரை தமிழ் மண்ணிலேயே கொன்று குவித்தது வரலாறு என்று ராஜீவ்காந்தியின் மரணம் குறித்துப் பேசினார். இதனால் காங்கிரஸ் கட்சியினர் சீமானுக்குக் கண்டனம் தெரிவித்து அவரை கைது செய்ய வேண்டும் என்று விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

  Seeman

  இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தேர்தல் பிரச்சாரத்தில் ராஜீவ்காந்தியின் மரணம் குறித்து தவறாகப் பேசியதால் சீமான் மீது எப்.ஐ.ஆர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

  Election commissioner

  மேலும், விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்கு இயந்திரங்கள் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது என்றும் இயந்திரங்களின் வரிசை எண்கள் குறித்து கட்சிகளுக்கு ஏற்கனவே தெரியப்படுத்தப்பட்டு விட்டன என்றும் தெரிவித்துள்ளார்.