சீன ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றிலேயே வெளியேறி அதிர்ச்சியளித்த சாய்னா நேவால்..!

  0
  1
  சாய்னா நேவால்

  சீன ஓபன் பேட்மிண்டன் போட்டியில் முதல் சுற்றிலேயே அதிர்ச்சிகரமாக தோல்வியடைந்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால்.

  சீனாவிலுள்ள சாங்சூ நகரில் சீன ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் பங்கு பெற்றார். முதல் சுற்றில் தரவரிசை பட்டியலில் எட்டாம் இடத்தில் இருக்கும் சாய்னா நேவால், இதே தரவரிசை பட்டியலில் 19 ஆவது இடத்தில் இருக்கும் தாய்லாந்து வீராங்கனை பூசனை எதிர்கொண்டார்.

  சீன ஓபன் பேட்மிண்டன் போட்டியில் முதல் சுற்றிலேயே அதிர்ச்சிகரமாக தோல்வியடைந்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால்.

  saina nehwal

  சீனாவிலுள்ள சாங்சூ நகரில் சீன ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் பங்கு பெற்றார். முதல் சுற்றில் தரவரிசை பட்டியலில் எட்டாம் இடத்தில் இருக்கும் சாய்னா நேவால், இதே தரவரிசை பட்டியலில் 19 ஆவது இடத்தில் இருக்கும் தாய்லாந்து வீராங்கனை பூசனை எதிர்கொண்டார்.

  இதில் தாய்லாந்து வீராங்கனையை எளிதில் வீழ்த்தி சாய்னா நேவால் காலிறுதி சுற்றுக்கு முன்னேறுவார் என அனைத்து இந்திய ரசிகர்களும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துரதிஷ்டவசமாக சாய்னா நேவால் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியது இந்திய ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. 

  saina nehwal

  சாய்னா நேவால் மீது துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பூஷன், முதல் செட்டில் 10-21 என எளிதாக வீழ்த்தி முன்னிலை பெற்றார். போட்டியை தக்கவைக்க இரண்டாவது செட்டில் சாய்னா நேவால் தனது போராட்டத்தை தொடர்ந்தார். இருப்பினும் துவக்கத்தில் பூசன் சற்று தடுமாறினாலும் பின்னர் முதல் செட்டை போலவே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி சாய்னா நேவாலை 17-21 என வீழ்த்தி நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

  ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற சாய்னா நேவால், தற்போது சீன ஓபன் பேட்மிண்டன் போட்டியின் முதல் சுற்றில் வெறும் 44 நிமிடங்கள் மட்டுமே தாக்குப் பிடித்து தோல்வியைத் தழுவி வெளியேறியது இந்தியாவிற்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்துள்ளது.