சீன அதிபர் வருகை! மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க தடை!! 

  0
  1
  Fishermen

  சீன அதிபர் ஸீ ஜின் பிங் மாமல்லபுரம் வருவதையொட்டி மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

  காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் செப்டம்பர் மாதம் 11 மற்றும் 12ம் தேதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் வருகை தர உள்ளனர். செப்டம்பர் 11ம் தேதி பிற்பகல் 1.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார் சீன அதிபர். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு மற்றும் கலாசார முறைப்படி வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

  Modi Xi

  இந்நிலையில் சீன அதிபர் ஸீ ஜின் பிங் மாமல்லபுரம் வருவதையொட்டி ஈஞ்சம்பாக்கம் முதல் புதுப்பட்டினம் வரையிலான கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்கத் தடை என மீன்வளத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.. மறு உத்தரவு வரும் வரை மீன்பிடிக்கக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.