சீன அதிபர் வருகை! காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை வாகனங்கள் செல்ல தடை! எந்த ஏரியாவில் தெரியுமா? 

  0
  2
  Modi - xi

  சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் வருகையையொட்டி வரும் 11,12ஆம் தேதிகளில் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

  சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் வருகையையொட்டி வரும் 11,12ஆம் தேதிகளில் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

  காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் செப்டம்பர் மாதம் 11 மற்றும் 12ம் தேதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் வருகை தர உள்ளனர். செப்டம்பர் 11ம் தேதி பிற்பகல் 1.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார் சீன அதிபர். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு மற்றும் கலாசார முறைப்படி வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

  Statement

  இந்நிலையில் வரும் 11,12ஆம் தேதிகளில் ஜிஎஸ்டி சாலை, அண்ணா சாலை, படேல் சாலை, ராஜீவ் காந்தி சாலை, இசிஆர் ஆகிய இடங்களில் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ராஜீவ் காந்தி சாலை, கிழக்கு கடற்கடை சாலைகளில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும் படியும் காவல்துறயினர் அறிவுறுத்தியுள்ளனர்.  தேசிய விருந்தினர்களின் சென்னை வருகை சிறப்பாக அமைய பொதுமக்கள், காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்கவும் சென்னை போக்குவரத்து காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 
   

  மேலும் பெருங்களத்தூரில் இருந்து நகருக்குள் வரும் வாகனங்கள் மதுரவாயல் புறவழிச்சாலை வழியாக திருப்பிவிடப்படும் என்றும், சென்னையில் தாம்பரம், குரோம்பேட்டை பகுதிகளிலிருந்து வரும் வாகனங்கள் பல்லாவரம் ரேடியல் சாலையை பயன்படுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை 100 அடி சாலை வழியாக வாகனங்கள் திருப்பிவிடப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.