சீனா கிருமிகள் கிடங்கை வைத்துள்ளது – நியூயார்க் போஸ்ட்

  0
  1
  கொரோனா வைரஸ்

  சீனா தனது நாட்டில் கிருமிகள் அடங்கிய கிடங்கை வைத்துள்ளதாகவும் அதில் இருந்தே கொரோனா வைரஸ் வெளியேறியதாகவும் நியூயார்க் போஸ்ட் என்ற அமெரிக்க ஊடகம் குற்றஞ்சாட்டியுள்ளது. 

  சீனா தனது நாட்டில் கிருமிகள் அடங்கிய கிடங்கை வைத்துள்ளதாகவும் அதில் இருந்தே கொரோனா வைரஸ் வெளியேறியதாகவும் நியூயார்க் போஸ்ட் என்ற அமெரிக்க ஊடகம் குற்றஞ்சாட்டியுள்ளது. 

  அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டிவன் டபிள்யூ மோசர் என்ற எழுத்தாளர் இதுதொடர்பாக நியூயார்க் போஸ்ட் பத்திரிகையில் கட்டுரை எழுதியுள்ளார். அதில், சீனாவின் வுகான் நகரில்தான் நுண்ணுயிரிகள் ஆய்வகம் இருப்பதாகவும் அங்கு பல கிருமிகளை சீனா வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். கொரோனா பரவியதைத் தொடர்ந்து, சீனாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், கொரோனா போன்ற புதிய மேம்பட்ட வைரஸ்களைக் கையாளும் வகையில் நுண்ணுயிரியல் ஆய்வகங்களில் பாதுகாப்பு நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் வகுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்ததை ஸ்டிவன் சுட்டிக்காட்டியுள்ளார்.

  coronavirus

  மேலும், அண்மையில் அவசரக் கூட்டம் ஒன்றில் பேசிய சீன அதிபர் ஷி ஜின்பிங், எதிர்காலத்தில் கொரோனா போன்ற  வைரஸ் தாக்குதல்கள் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இதன்மூலம் தங்களிடம் கொடூர கிருமிகள் பாதுகாக்கப்பட்டு வருவதை சீன அதிபர் மறைமுகமாக ஒப்புகொண்டுள்ளதாக எழுத்தாளர் ஸ்டீவன் நியூயார்க் போஸ்ட்  பத்திரிகையில் எழுதியுள்ளார்.